தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Also Find The Rasis That Will Be Troubled By The Combination Of Saturn And Mars

Sani Game: சனியும் செவ்வாயும் சேர்ந்து கஷ்டப்படுத்தும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2024 10:00 AM IST

சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையால் சிரமப்படப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.

சனி மற்றும் செவ்வாய்
சனி மற்றும் செவ்வாய்

ட்ரெண்டிங் செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். கர்மநாயகனாக திகழ்ந்துவரும் சனி பகவான் நன்மை தீமைகள் என அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை துணிவு, வலிமை, தைரியம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்க படுகிறது.

தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வரும் அதே நிலையில் ஒரு மார்ச் மாதம் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி மற்றும் செவ்வாய் சேர்க்கின்றனர். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். பெற்றோரின் உடல் நலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய்களால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் நஷ்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

மீன ராசி

 

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. தவறான புகார்கள் உங்கள் மீது வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மன அழுத்தம் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

 

WhatsApp channel