கடவுளுக்கு அபிஷேகம் தேவையா? - தெரிந்துகொள்ளலாம் வாங்க!
அபிஷேகம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாக இங்கே காண்போம்.

இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும்போது அபிஷேகம் செய்வதைத் தரிசனம் செய்வோம். சிலர் வீடுகளில் கூட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்கின்ற பக்தர்களையும் கண்டிருப்போம்.
தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?, எந்தெந்த திரவியத்தால் அபிஷேகம் செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
தெய்வத்திற்குள் அண்டங்கள் எல்லாம் அடங்குகின்றன. அந்த தெய்வம் குளிர்ந்தால் அண்டங்கள் எல்லாம் குளிர்ந்து விடும் என்பது ஐதீகம். அந்த தெய்வங்களைக் குளிர்விக்கும் உபாயமாகத்தான் நம் நாட்டு மகான்கள் அபிஷேக முறைகளைப் போதித்தார்கள்.
அண்டத்தில் உள்ள அனைத்தையும் தனித்தனியாகக் குளிர்விப்பதென்பது இயலாத காரியம். அதற்குப் பதிலாக அண்டங்கள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து பலன் பெறுவது எளிதாகும். தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து புண்ணியம் பெறுவதோடு, கூடவே அனைத்தையும் மிகச் சுலபமாகக் குளிர்விக்க முடியும்.
எளிமையான வழியாக உள்ள அபிஷேகத்தின் அர்த்தம் ஆழமானது. எந்தெந்த திரவியத்தில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
அபிஷேக பலன்கள்
- பசும்பால் அபிஷேகத்தால் நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளும் பெறலாம்.
- இளநீர் அபிஷேகத்தால் யோகத்தைப் பெறலாம்.
- தேன் அபிஷேகத்தால் சங்கீதத்தையும் குரல்வளமும் பெறலாம்.
- பஞ்சாமிர்த அபிஷேகத்தால் செல்வத்தைக் கிடைக்கும்.
- தயிர் அபிஷேகத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- எலுமிச்சம்பழம் அபிஷேகம் எம பயத்தைப் போக்கும்.
- தண்ணீர் அபிஷேகம் சாந்தியளிக்கும், மன அமைதி உண்டாக்கும்.
- நெல்லிப்பொடி அபிஷேகம் நோய் நீக்கும்.
- நாட்டுச்சர்க்கரை அபிஷேகத்தால் பகைவர் அழிவர்.
- அரிசிப்பொடி அபிஷேகம் கோடி கடனை போக்கும்.
- வாழைப்பழம் அபிஷேகம் பயிர் விருத்தி தரும்.
- பச்சை கற்பூரம் அபிஷேகம் பயம் நீக்கும்.
- அன்ன அபிஷேகம் சாம்ராஜ்யத்தை அளிக்கும்.
இவ்வாறாக பல்வேறு திரவியங்களால் தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து பெரும் பலன்களைப் பெறலாம். பல பொருட்களை வாங்கிக்கொடுத்து பெரிய பல நற்பலன்களை அடையலாம்.
தெய்வத்திற்கு அபிஷேகங்கள் நடைபெறும்போது, தெய்வத்தின் திருப்பெயர்களை உச்சரித்துக் கொண்டே இருந்தால் நமக்கு மிகச் சிறப்பான நல்வாழ்வு அமையும் என்பது ஐதீகமாகும்.
