தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Find The Rasis Where Mars And Venus Combine To Give Lakshmi Yoga

கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. சனி.. செவ்வாய்.. சுக்கிரன் கூட்டணி.. மகாலட்சுமி யோக ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 04:45 PM IST

Lakshmi Yoga: கடந்த மார்ச் 7ஆம் தேதி என்று கும்ப ராசியில் சுக்கிரன் நுழைந்தார் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் செவ்வாய் சுக்கிரன் சனி மூன்று பேரும் இணைந்துள்ளனர். இதனால் லட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

சுக்கிரன்
சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் துணிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவானின் சொந்த ராசியாக கும்ப ராசி விளங்கி வருகின்றது. சனிபகவான் கும்ப ராசிகள் தற்போது பயணம் செய்து வருகின்றார்.

கடந்த மார்ச் 7ஆம் தேதி என்று கும்ப ராசியில் சுக்கிரன் நுழைந்தார் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் செவ்வாய் சுக்கிரன் சனி மூன்று பேரும் இணைந்துள்ளனர். இதனால் லட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் உச்ச நிலையை அடையப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் லட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் லட்சுமி யோகம் அமைந்துள்ளது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் லட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் வணிகத்தின் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையை தொடங்குவதற்கான சூழ்நிலை அமையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel