HT Yatra: தவமிருந்த முருக பெருமான்.. திருமணம் நடந்த திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானின் முதல் வீடான திருப்பரங்குன்றம் திருக்கோயிலின் வரலாறு குறித்து இங்கே காரணம்.
ஆறுபடை வீடு கொண்டு உலகத்தை ஆட்சி செய்யும் கடவுளாக முருகப்பெருமாள் விலகி வருகிறார் தமிழ் கடவுளாக விளங்கிவரும் முருகப்பெருமானுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆறுபடை வீடு கொண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் முருகப்பெருமானின் முதல் வீடாக திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது மிகப்பெரிய கோயிலா லிங்க வடிவில் இருக்கக்கூடிய மலையின் மீது அமைந்துள்ளது இந்த திருக்கோயில். லிங்க வடிவம் கொண்ட இந்த மலை குறித்து திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் புகழ்ந்து பாடி உள்ளனர்.
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானை சங்க காலப் புலவர் நக்கீரர் வழிபட்டு தனக்கு ஏற்பட்ட தீங்கை நிவர்த்தி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. லிங்க வடிவம் கொண்டு இந்த மலை மக்களுக்கு அருள்பாளித்து வருவதாக கூறப்படுகிறது.
கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் இருவரையும் வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
தல வரலாறு
இந்த திருப்பரங்குன்றத்தில் இருந்து கொண்டு முருகப் பெருமான் தவமிருந்து தனது பெற்றோரை வழிபடுவதாக கூறப்படுகிறது. ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருள் குறித்து உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது தனது தாயின் மடியில் அமர்ந்திருந்த முருக பெருமான் பிரணவ மந்திரத்தின் உபதேசத்தை அறிந்து கொண்டார்.
புனித மந்திரத்தை எப்பொழுதும் குருவின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் மறைமுகமாக அறிந்து கொள்வது என்பது பாவம் என கூறப்படுகிறது. முருகப்பெருமானும், சிவபெருமானும் ஒருவர் தான் என்றாலும் குருவின் அனுமதியில்லாமல் மந்திரத்தை தெரிந்து கொண்டது தவறாகும்.
சாஸ்திரத்தின் படி குருவின் உபதேசம் இல்லாமல் மறைமுகமாக பிரணவ மந்திரத்தின் உபதேசத்தை முருக பெருமான் அறிந்து கொண்ட காரணத்தினால் அது நீதிக்கு மாறான விஷயமாக கருதப்பட்டது. இதன் காரணமாக பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்தில் மீது அமர்ந்து தவம் செய்ய தொடங்கினார்.
தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானும் பார்வதி தேவியும் முருகப்பெருமானுக்கு காட்சி கொடுத்து அவருக்கு அருள்பாலித்துவிட்டு அதே இடத்தில் பரங்கி நாதர் மற்றும் ஆவுடை நாயகி என்ற பெயரில் அமர்ந்தனர்.
முருகப்பெருமான் மட்டுமல்லாது இந்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. முதலில் கோயிலுக்குச் செல்லக் கூடியவர்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்னர் முருகப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இங்கே வீட்டிற்கு கூடிய முருக பெருமானுக்கு தைப்பூச தினத்தன்று சிவபெருமான் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது எனவே இந்த கோயிலில் தைப்பூசத் திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் இருவரையும் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து இஷ்ட காரியங்களும் நடக்கும் என கூறப்படுகிறது.
சூரபத்மனை அழித்து தேவர்களை காப்பாற்றிய காரணத்தினால் தேவர்கள் நன்றி கடன் செலுத்துவதற்காக இந்திரன் தனது மகள் தெய்வயானை முருகப் பெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருவரின் திருமணமும் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது.
இருக்கும் இடம்
மதுரையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. தங்குமிடம் மற்றும் உணவு விடுதி அனைத்து வசதிகளும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9