பத்து பொருத்தம் தேவையா? பத்து பொருத்தம் பார்த்தும் பிரச்னை வருவது ஏன்?.. ஜோதிடர் விளக்கம் இதோ!
நிச்சயிக்கும் திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்க்க வேண்டியது அவசியம் என பெற்றோர் எண்ணுகிறார்கள். அதில் தவறில்லை. திருமணத்திற்கு பத்து பொருத்தம் தேவைதான். ஆனால் 10 பொருத்தம் மட்டும் போதும் என்று நினைப்பதுதான் தவறு.

திருமண பேச்சை வீட்டில் ஆரம்பித்தாலே, முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், அடிக்கடி காதில் விழுவது 10 பொருத்தம். 10-ல் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
அதென்ன பத்து பொருத்தம்?
ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள். பத்து பொருத்தம் என்றால், 10 விதமான பொருத்ததை குறிப்பிடுகிறது. தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூ (கயிறு) பொருத்தம், வேதைப் பொருத்தம். இவற்றைதான் பத்து பொருத்தம் என்று சொல்வார்கள். (இந்த 10 பொருத்தம் குறித்து விலாவரியாக மற்றொரு பதிவில் பார்ப்போம்)
பத்துக்கு பத்து பொருத்தங்கள், எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானது என சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள். நிச்சயிக்கும் திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்க்க வேண்டியது அவசியம் என பெற்றோர் எண்ணுகிறார்கள். அதில் தவறில்லை. திருமணத்திற்கு பத்து பொருத்தம் தேவைதான். ஆனால் 10 பொருத்தம் மட்டும் போதும் என்று நினைப்பதுதான் தவறு.