தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here Are The Zodiac Signs Who Are Going To Get Tremendous Benefits From Mercury Declination

Mercury Luck: புதன் கொட்டும் யோகம் இந்த ராசிகளுக்கு மட்டுமே

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 21, 2024 11:43 AM IST

Transit of Mercury: புதன் பகவான் வக்ர நிவர்த்தியால் அதீத பலன்களை பெற போகின்ற ராசிக்காரர்கள் இங்கே காண்போம்

புதன் வக்ர பெயர்ச்சி
புதன் வக்ர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புதன் பகவான் புத்திசாலித்தனம் பேச்சு, அறிவு, பகுத்தறிவு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் சீரான நிலையில் இருந்தால் அவர்களுக்கு கல்வி மற்றும் அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதன் பகவான் இதுவரை பின்னோக்கிய பயணமாக வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார்.

இந்நிலையில் புதன் பகவான் ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இவருடைய நேரான பயணம் தற்போது ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. அப்படி சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் புதன் பகவான் ஏழாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் உருவாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

துலாம் ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ள காரணத்தினால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். திருமண வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு பெரிய வெற்றி கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பேச்சு திறமையால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய ஒப்பந்தங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் புதன் பகவான் நான்காவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ள காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். புதன் பகவானும் சூரிய பகவானும் நட்பு கிரகங்கள் என்பதால் உங்களுக்கு அனுகூலமான சுப பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சேர்க்கை உண்டாகும். புதிதாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கக்கூடும். வழக்கத்தை விட சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள உறவுகளோடு நெருக்கம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.