தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பணத்தைக் கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள்.. யோக ராசிகள் நீங்களா பாருங்கள்

Money Luck: பணத்தைக் கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள்.. யோக ராசிகள் நீங்களா பாருங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 25, 2024 01:14 PM IST

Lord Mars: மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிக்கு சொல்லுகிறார். ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த ராசிக்கு செல்கிறார்.

பணத்தைக் கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள்.. யோக ராசிகள் நீங்களா பாருங்கள்
பணத்தைக் கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள்.. யோக ராசிகள் நீங்களா பாருங்கள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார் தற்போது.

நவகிரகங்களாக பொது தங்களுக்கு இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றினாலும் அவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிக்கு சொல்லுகிறார். ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த ராசிக்கு செல்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. 

அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வசதிகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் இருக்கும். அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel