தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here Are The Zodiac Signs That Will Enjoy The Fortune Of Venus To The Fullest

Lord Venus: சுக்கிரன் பறந்து வருகிறார்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்.. பணவரவில் குறை இல்லை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 27, 2024 11:52 AM IST

சனி மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்து நல்ல யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைந்தார்.

ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்து நல்ல யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அனைத்து திட்டங்களும் நிறைவேறும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. எதிர்பார்த்த வேலை உங்களுக்கு கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல காலம் அமையும். அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களின் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel