தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: பணத்தில் தாவி குதித்த ராசிகள்.. செவ்வாய் பணக்கடலாக மாறினார்.. மகிழ்ச்சி யோகம் வருகிறது

Lord Mars: பணத்தில் தாவி குதித்த ராசிகள்.. செவ்வாய் பணக்கடலாக மாறினார்.. மகிழ்ச்சி யோகம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 02:03 PM IST

Lord Mars: மேஷ ராசி செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது.

பணத்தில் தாவி குதித்த ராசிகள்.. செவ்வாய் பணக்கடலாக மாறினார்.. மகிழ்ச்சி யோகம் வருகிறது
பணத்தில் தாவி குதித்த ராசிகள்.. செவ்வாய் பணக்கடலாக மாறினார்.. மகிழ்ச்சி யோகம் வருகிறது

Lord Mars: நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து திராட்சைகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிகள் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேஷ ராசி செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

உறவினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உயர் அலுவலர்களிடம் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிதி நிலைமையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

தற்போது பயணங்கள் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்டு தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மந்தமான சூழ்நிலையில் இருக்கும் தொழிலில் பெரிய லாபம் இருக்காது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தை அதிகமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக கவனம் செலுத்தி உங்களது உடல் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். 

புதிய முயற்சிகள் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும். மற்றவர்களிடம் ஆலோசனை பெற்று களத்தில் இறங்குவது நல்லது. புதிய முதலீடுகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் அதிக கவனம் செலுத்தி உங்களது. 

தொழில் மற்றும் வியாபாரத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதம் ஏற்படக்கூடும். குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9