தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here Are The Zodiac Signs That Will Benefit From Lord Mars Rising

Lord Mars Luck: செவ்வாய் தனுசு ராசியில் உதயம்.. யாருக்கு யோகம்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2024 02:02 PM IST

Transit of Mars: செவ்வாய் உதயமானதால் பலன்களைப் பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய்
செவ்வாய்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் வீரம், துணிவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.

நவகிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் மாறுவது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதே போல நவகிரகங்களின் அஸ்தமனம் உதயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். தொடங்கிய இந்த புத்தாண்டில் முதல் முறையாக செவ்வாய் பகவான் உதயமாகியுள்ளார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பல்வேறு விதமான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொடக்கத்தில் இருந்த தடைகள் அனைத்தும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிவர்த்தி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவானின் உதயம் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகி நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களால் மரியாதை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில்துறையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவானின் உதயம் நிகழ்ந்துள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சில நேரங்களில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.