தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ஜூன் மாதத்தை குறி வைத்து செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. யோகராசிகள் நீங்களா பாருங்கள்!

Money Luck: ஜூன் மாதத்தை குறி வைத்து செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. யோகராசிகள் நீங்களா பாருங்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2024 12:43 PM IST

Money Luck: செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற போகின்றன. குறிப்பாக அவர்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் மன தைரியம் அதிகரிப்பு உள்ளிட்டவைகள் கிடைக்கும்.

ஜூன் மாதத்தை குறி வைத்து செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. யோகராசிகள் நீங்களா பாருங்கள்
ஜூன் மாதத்தை குறி வைத்து செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. யோகராசிகள் நீங்களா பாருங்கள்

தற்போது மீன ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைகின்றார். ஒரு ஆண்டிற்கு பிறகு மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் வருகின்றார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற போகின்றன. குறிப்பாக அவர்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் மன தைரியம் அதிகரிப்பு உள்ளிட்டவைகள் கிடைக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும். ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாதம் முதல் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உணவு சம்பந்தப்பட்ட வேலைகளில் அற்புதமான பலன்கள் உண்டாகும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பற்றி தரும். மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel