தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீன ராசியில் புரட்டப் போகும் புதன்.. பண மழையில் சிக்கிய 3 ராசிகள்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்கள் உண்டா?

மீன ராசியில் புரட்டப் போகும் புதன்.. பண மழையில் சிக்கிய 3 ராசிகள்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்கள் உண்டா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 17, 2024 11:45 AM IST

Lord Mercury: புதன் பகவானால் கிடைக்காமல் தடைபட்டு கிடந்த அனைத்து விதமான நல்ல பலன்கள் அனைத்தும் சில ராசிகளுக்கு கிடைக்கப் போகின்றது. புதன் பகவானின் உதயத்தால் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

புதன்
புதன்

புதன் பகவான் பேச்சு, வியாபாரம், படிப்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது மீன ராசியில் அன்பு புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் புதன் பகவான் ஏப்ரல் 19ஆம் தேதி என்று மீன ராசியில் உதயமாகின்றார்.

இதுவரை புதன் பகவானால் கிடைக்காமல் தடைபட்டு கிடந்த அனைத்து விதமான நல்ல பலன்கள் அனைத்தும் சில ராசிகளுக்கு கிடைக்கப் போகின்றது. புதன் பகவானின் உதயத்தால் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் புதன் பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை மாற்றத்தால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல முயற்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக நடக்கும் இருப்பினும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது பெட்டில் புதன் பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் ரீதியான சிறப்பான பலன்கள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel