தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus: யோக வாழ்க்கை தொடங்கும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. உங்க ராசி இதில் உண்டா?

Lord Venus: யோக வாழ்க்கை தொடங்கும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. உங்க ராசி இதில் உண்டா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 24, 2024 04:20 PM IST

Lord Venus: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி லிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

யோக வாழ்க்கை தொடங்கும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. உங்க ராசி இதில் உண்டா?
யோக வாழ்க்கை தொடங்கும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. உங்க ராசி இதில் உண்டா?

சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி லிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து எனக்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதங்கள் நடக்க போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இன்பம் அதிகமாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு ஒரு தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். குடும்ப உறுப்பினர்களால் உறவு மோசமாக கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து வகையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel