தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  படுக்கையறையில் மோசமான ராசிகள்.. எப்போதும் வெறியோடு இருப்பார்களாம்.. உங்க ராசி இருக்கா?

படுக்கையறையில் மோசமான ராசிகள்.. எப்போதும் வெறியோடு இருப்பார்களாம்.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 10, 2024 12:17 PM IST

Lust Life: படுக்கை அறையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ராசிக்காரர்கள் சிலர் உள்ளனர். தனித்துவமான செயல்பாடுகளோடு எப்போதும் நெருக்கமாக இருக்கக்கூடிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

படுக்கையறையில் மோசமான ராசிகள்.. எப்போதும் வெறியோடு இருப்பார்களாம்
படுக்கையறையில் மோசமான ராசிகள்.. எப்போதும் வெறியோடு இருப்பார்களாம்

நம்முடைய பிறந்த தேதி மற்றும் ராசி இந்த இரண்டும் நமது ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் விவரமாக எடுத்துரைக்கின்றது. இதில் இல்லற வாழ்க்கையும், தாம்பத்திய வாழ்க்கையும் அடங்கும். படுக்கை அறை செயல்பாடுகளையும் கிரகங்களின் அமைப்பு எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் படுக்கை அறையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ராசிக்காரர்கள் சிலர் உள்ளனர். தனித்துவமான செயல்பாடுகளோடு எப்போதும் நெருக்கமாக இருக்கக்கூடிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம். உங்கள் வாழ்க்கை துணையை பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மேஷ ராசி

 

மன தைரியத்தோடு எப்போதும் வெளிப்படையாக இருக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். எப்போதும் தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் மற்றும் ஆதிக்கத்தை நிலையாக செலுத்தக்கூடிய ராசியாக நீங்கள் உள்ளீர்கள். நெருக்கமான மற்றும் உற்சாகமாக செயல்படக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். எப்போதும் ஆக்ரோஷமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில் நீங்கள் தயாராக இருப்பீர்கள். காதல் வாழ்க்கையில் உற்சாகத்தோடு செயல்பட கூடியவர்களில் நீங்களும் ஒருவர்.

சிம்ம ராசி

 

தன்னம்பிக்கை மற்றும் அதிகாரத்தன்மை அதிகம் கொண்டவர்கள் நீங்கள். கவர்ச்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்டு உங்களுக்கு வித்தியாசமான அணுகுமுறை மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இவர் வாழ்க்கையில் எல்லை இல்லா ஆர்வத்தை எப்பொழுதும் கொடுக்க விரும்புகிறீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கை துணை உங்களோடு இணைபிரியாமல் இருப்பார்கள். 51 வாழ்க்கையில் அதீத ஈடுபாடு கொண்டு நீங்கள் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க விரும்புகிறீர்கள். இந்த விஷயத்தில் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள்.

விருச்சிக ராசி

 

தன்னை எப்போதும் மர்மமான முறையில் வைத்திருக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். எந்த விஷயமாக இருந்தாலும் அதிக நெருக்கம் கொடுத்து தனது உணர்ச்சியோடு பொருத்தி செயல்படுத்தக் கூடியவர்கள். எப்போதும் நெருக்கமான விஷயத்திற்கு அதிக ஈடுபாடு கொடுத்து தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாட்டை அதிகம் விரும்பக் கூடியவர்கள். ஆழமான தருணங்களில் உருவாக்கும் எண்ணம் கொண்ட ராசிக்காரர்கள். நீங்களும் ஒருவர் எப்போதும் அதிக ஈடுபாட்டோடு தயாராக இருப்பீர்கள்.

தனுசு ராசி

 

இயற்கையாகவே சாகச எண்ணம் கொண்டவர்கள். நீங்கள் திறந்த மனப்பான்மையோடு புதிய முயற்சிக்கு விருப்பம் கொடுத்து ஈடுபாட்டோடு செயல்படக் கூடியவர்கள். புத்துணர்ச்சியோடு நெருக்கமான உறவுகளிடம் நெருக்கமான ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவர்கள். தாம்பத்திய உறவில் பன்முகத்தன்மையோடு செயல்பட்டு சிறந்த தருணங்களை உருவாக்கும் எண்ணம் கொண்டவர்கள். நீங்கள் அதனால் காதல் வாழ்க்கையில் எப்போதும் சாகசத்தை நிறுத்துவதற்கு தயாராக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையோடு எப்போதும் இணக்கமாக இருப்பீர்கள். மற்ற ராசிகளோடு ஒப்பிடுகையில் நீங்கள் திருமண வாழ்க்கைக்கு சிறந்து தேர்வாக இருப்பீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

WhatsApp channel