தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டோ கொட்டுன்னு பணம் கொட்ட போகுது.. சூப்பராக வாழப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருது

கொட்டோ கொட்டுன்னு பணம் கொட்ட போகுது.. சூப்பராக வாழப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருது

Suriyakumar Jayabalan HT Tamil
May 10, 2024 05:30 PM IST

Lord Venus: சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவருடைய ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கொட்டோ கொட்டுன்னு பணம் கொட்ட போகுது. சூப்பராக வாழப் போகும் ராசிகள்
கொட்டோ கொட்டுன்னு பணம் கொட்ட போகுது. சூப்பராக வாழப் போகும் ராசிகள்

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மேஷ ராசியில் மே 19ஆம் தேதி வரை பயணம் செய்வார் அதற்கு பிறகு அவருடைய சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார்.

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவருடைய ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பெற்றோர்களால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை கொடுத்துக் கொள்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு அதிக செலவு செய்தீர்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தை மட்டும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மிதுன ராசி

 

வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பணயோகம் கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல செய்தி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel