தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிறப்பிலேயே மிகவும் பலவீனமாக இருக்கக்கூடிய ராசிகள்.. எப்போதும் அழுகைதான்.. சீக்கிரம் உடைஞ்சிடுவாங்க..!

பிறப்பிலேயே மிகவும் பலவீனமாக இருக்கக்கூடிய ராசிகள்.. எப்போதும் அழுகைதான்.. சீக்கிரம் உடைஞ்சிடுவாங்க..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 15, 2024 10:53 AM IST

இயற்கையாகவே பலவீனமாக இருக்கக்கூடிய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ராசிபலன்
ராசிபலன்

உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் தனிப்பட்ட குணாதிசயத்தை கொண்டிருக்கும். மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமாக தங்களது குணத்தின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள். தனக்கான குணங்கள் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக விளங்கி வரும்.

அந்த கிரகங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களும் தனிப்பட்ட சிறப்பு குணாதிசயத்தை பெற்றெடுப்பார்கள். அந்த வகையில் ஒரு சில ராசிகள் இயற்கையாகவே மிகவும் பலவீனமாக இருப்பார்கள். சிறிய விஷயங்களுக்கு கூட எளிதில் பலவீனமடைந்து உடைந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ராசிகள் யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

இவர்கள் சந்திரன் பகவானால் ஆளப்படக்கூடிய ராசியாக திகழ்ந்து வருகின்றனர். மிகவும் உணர்ச்சிக்கு அதிக இடம் கொடுத்து வாழக்கூடியவர்கள் உள்ளுணர்வு இயல்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மிகவும் ஆழமாக உணர்ந்து செயல்படக் கூடியவர்கள். அனைத்து முடிவுகளையும் தங்களது இதயத்தை அணுகி எடுக்கக்கூடியவர்கள். மற்றவர்களின் செயலால் பாதிக்கப்பட்டால் அடிக்கடி அழுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அதிக இரக்க குணம் கொண்டவர்கள் அதுவே அவர்களது பலவீனமாகும்.

மீன ராசி

 

உள்ளுணர்வு மற்றும் நெருக்கமான உறவுகளுக்கு அதிக இடம் கொடுக்கக் கூடியவர்கள். இவர்கள் மிகவும் இரக்கமுள்ள மனிதர்களாக வாழக்கூடியவர்கள். மகிழ்ச்சி மற்றும் துக்கம் இந்த அனைத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தங்களது உணர்வை எளிதில் வெளிப்படுத்தி விடுவார்கள். அதிகம் அது கண்ணீராகத்தான் இருக்கும். இவர்கள் அதிக அன்பு பலவீனமாக அமைந்திருக்கின்ற காரணத்தினால் எளிதில் உடைந்து விடுவார்கள். சிறிய பிரிவு ஏற்பட்டாலும் அதிகமாக மனம் வருந்தி கண்ணீர் விடுவார்கள்.

விருச்சிக ராசி

 

புளூட்டோ கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் வெளியே இருப்பவர்களுக்கு மிகவும் மர்மமாக தெரிவார்கள். எளிதில் மற்றவர்களிடம் தங்களைப் பற்றி வெளிப்படுத்த மாட்டார்கள். தங்களது உணர்வுகளை வெளிப்படையாக காட்டாமல் அமைதியாக இருக்கக் கூடியவர்கள். ஆனால் தங்களது ஆழ்ந்த அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் காரணமாக எளிதில் கண்ணீரில் மூழ்கி விடுவார்கள். மனரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் இவர்கள்.

ரிஷப ராசி

 

காதல் கிரகமான சுக்கிரனின் ஆதரவால் ஆளப்படக் கூடியவர்கள் இவர்கள். எப்போதும் எதார்த்தமாக இருக்கக்கூடிய ராசிக்காரர்கள். ஆழமான உணர்ச்சிக்கு உட்பட்டவர்கள். இதே பூர்வமான செயல்பாடுகளால் அடிக்கடி அழுது கொண்டே இருப்பார்கள். எளிதில் மற்றவர்களிடம் அன்பாக இறங்கி விடுவார்கள். மீண்டும் அவர்களை விட்டு எளிதில் விலகி விடுவார்கள். தங்களது ஆழமான அன்புக்கு உட்பட்டவர்களால் பாதிக்கப்பட்டால் உச்சகட்ட சோகத்திற்கு சென்று விடுவார்கள். எளிதில் உணர்ச்சிவசப்பட கூடிய ராசியாக விளங்கி வருகின்றார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel