Kolli Hills Temple : கொல்லிமலை முக்கிய கோயில்கள்!
கொல்லிமலையில் சிறப்பாக விளங்கும் மூன்று கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.
கொல்லிமலை காடு சித்தர்களின் வாழ்விடமாக கூறப்படுகிறது. இந்த கொல்லிமலை இறைவனின் இருப்பிடமாக கூறப்படுகிறது. பல அதிசயங்கள் நிறைந்த இந்த கொல்லிமலையில் சிறப்பாக விளங்கும் மூன்று கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.
மாசி பெரியண்ணசாமி
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 மீட்டர் உயரத்தில் 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது கொல்லிமலை. கரடு முரடான மலை பாதைகள் நடந்து சென்று மாசி பெரியண்ணசாமி தரிசிக்க முடியும். கருப்பு முனி போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் முன்னோடி மாசி பெரியண்ணசாமி.
பல்வேறு இடங்களில் மாசி பெரியண்ணசாமியை தரிசித்தாலும் கொல்லிமலையின் உச்சியில் மாசி என்ற பாறையில் அமைந்துள்ள மூலக் கோயிலில் இவரை தரிசிப்பது சிறப்பு எனக் கூறப்படுகிறது.
அறப்பளீஸ்வரர் கோயில்
1300 ஆண்டுகள் பழமையானது கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில். 18 சித்தர்களும் இன்றும் சுயம்புவாக தோன்றிய அறப்பளீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். அறம் வளர்த்த நாயகியின் கருவறை முன் மண்டப மேற்கு சுவயில் சுற்றிலும் அஷ்ட லட்சுமி உருவங்களும் அமைந்துள்ளது. அதன் அடியில் வந்து தியானம் செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
எட்டுக்கை அம்மன்
குடவரை காத்து நிற்கும் தெய்வம் மாயா இயற்கை பாவை. இது காற்று தாக்கி இடித்தாலும், கடும் மழை பொழிந்தாலும், இடிதாக்கினாலும், உயிரினங்கள் ஊறு செய்தாலும், நிலம் நடுங்கினாலும் இதன் அழகு மாறாது என்கிறது அகநானூறு.
மேலும் தெய்வத்தாலோ, பூதத்தாலோ சித்தர்களாலும் எழுதப்பட்டது இந்த பாவை. எங்கிருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போலவே தோன்றும். மாய சிரிப்பால் மயக்கி கான்பூர் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து தவறு செய்பவர்களை கொல்லும் இந்த பாவையை எட்டுக்கை அம்மனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.