தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here Are The Special Temples To Worship On Pongal 2024

HT Yatra: பொங்கல் திருநாளில் பார்க்க வேண்டிய கோயில்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 15, 2024 06:00 AM IST

பொங்கல் தினத்தன்று வழிபாடு செய்ய வேண்டிய சிறப்பு கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.

 பொங்கல் கோயில்கள்
பொங்கல் கோயில்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பொங்கல் திருநாள் தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது போகி அன்று தொடங்கப்படும் இந்த பொங்கல் திருநாள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகித் திருநாளன்று வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை அழித்துவிட்டு, புதிய பொருட்களை வீட்டுக்குள் கொண்டுவரும் நாளாக போகித் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியனை வழிபாடு செய்யும் பொங்கல் திருநாள் அன்று வீடு கோயிலாக காட்சியளிப்பதற்காக முதல் நாளே போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டு மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று மனிதனோடு ஓர் உயிராக கலந்து வாழக்கூடிய பசுக்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய மாடுகளை சுத்தம் செய்து, மாட்டு தொழுவத்தையும் சுத்தம் செய்து மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வித விதமான உணவுகள் கொடுக்கப்பட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தை மாதத்தின் மூன்றாம் நாளான காணும் பொங்கல் சமத்துவ திருநாளாக கொண்டாடப்படுகிறது இந்த திருநாளில் அனைவரும் ஒன்று கூடி கிராமப்புறங்களில் பல்வேறு விதமான விளையாட்டுகள் போட்டிகள் அனைத்தும் நடத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். தமிழருக்கே உரித்தான ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி இந்த பொங்கல் திருநாளில் நடத்தப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

பொங்கல் திருநாளன்று கடவுள் வழிபாடு மிகவும் அவசியமாகும். அதே சமயம் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டால் அதீத நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் திருநாள் என்று அனைத்து கோயில்களிலும் வழிபடலாம். ஆனால் சில கோவில்களில் வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அது எந்தெந்த கோயில்கள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பொங்கலன்று பார்க்க வேண்டிய கோயில்கள்

 

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்

 

பொங்கல் தினத்தன்று இந்த கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறும் சொக்கநாதரும் மீனாட்சியும் சேர்ந்து அருள் பாலிக்கும் கூடிய இந்த திருக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

 

அறுபடை வீடுகளில் சிறப்பு விடாக அமைந்துள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிணி நீங்கி, வறுமை நீங்கும் என கூறப்படுகிறது. பொங்கல் திருநாளன்று இந்த திருக்கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

மருதமலை முருகன் கோயில்

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள மருதமலை கோயிலுக்கு சென்று முருக பெருமானை வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களும் பெருகும் எனக் கூறப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றாக இந்த முருகன் கோயில் இல்லாவிட்டாலும் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.

அண்ணாமலையார் திருக்கோயில்

 

பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்க கூடியது திருவண்ணாமலை திருக்கோயில் இந்த கோயிலுக்கு சென்று பொங்கல் தினத்தன்று வழிபாடு செய்தால் அனைத்து பிறவிகளுக்கும் மோட்சம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொங்கல் தினத்தன்று ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வார்கள்.

கும்பகோணம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

 

கும்பகோணம் தாராசுரம் பகுதியில் அமைந்துள்ள இந்த திருக்கோயிலில் சிவபெருமான் தேரின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் பொங்கல் தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து விதமான செல்வ யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் பொங்கல் தினத்தன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கக்கூடிய எந்த கோயிலுக்கும் சென்று வழிபட்டால் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். ஏனென்றால் பொங்கல் திருநாள் ஒரு சிறப்பு மிகுந்த நாளாக விளங்கி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.