பணம் மழை யாருக்கு?.. சனியோடு அதிர்ஷ்டம் கொட்டும் செவ்வாய்.. ராஜயோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணம் மழை யாருக்கு?.. சனியோடு அதிர்ஷ்டம் கொட்டும் செவ்வாய்.. ராஜயோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள்

பணம் மழை யாருக்கு?.. சனியோடு அதிர்ஷ்டம் கொட்டும் செவ்வாய்.. ராஜயோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 15, 2024 04:32 PM IST

Mars: அந்த வகையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பொறுமையாக இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக அவர் விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் உங்கள் ராசிகளின் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். பெற்றோரின் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண முதலீடுகள் வெற்றியை பெற்று தரும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். மன மகிழ்ச்சியை உங்களுக்கு உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும் பணவரவில் இந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9