Tamil Calendar 2025: ஜன.19 இன்று சுபமுகூர்த்தம்.. விஷேசங்கள் என்ன?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. காலண்டர் தகவல்கள்
Tamil Calendar 19.01.2025: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், இன்றைய நாள் ஜனவரி 19 (ஞாயிற்றுக்கிழமை) பொதுவாக சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம். அதேபோல், முருகப்பெருமான வழிபாடு செய்து வந்தால் செல்வ சேர்க்கை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
Feb 16, 2025 05:00 AMToday Rasipalan : ‘வெற்றி தேடி வரும்.. கோபம் வேண்டாம்.. வேலையில் கவனம் மக்களே’ இன்று பிப்.16 ராசிபலன் இதோ!
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
Feb 15, 2025 11:21 AMMoney Luck: அதிர்ஷ்ட கதவை திறக்கும் குரு.. மங்கள யோகத்தை பெற்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு யோகம் தான்!
Feb 15, 2025 07:00 AMSani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!
Feb 15, 2025 05:00 AMToday Rasipalan : 'நல்ல செய்தி தேடி வரும்.. தயக்கம் வேண்டாம்.. தைரியமா இருங்க' இன்றைய ராசிபலன் இதோ!
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : தை 06
தேதி: 19.01.2025
கிழமை - ஞாயிற்றுக்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:35 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 03:30 மணி முதல் 04:30 மணி வரை நல்ல நேரம்
ராகுகாலம்
காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை ராகுகாலம்
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
மதியம் 01:30 மணி முதல் 02:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
௭மகண்டம்
பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை எமகண்டம்
குளிகை
மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
கரணம்
காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
காலை: 08.37 வரை தைதுலம், பின்பு இரவு: 09.35 வரை கரசை, பின்பு வணிசை.
சூரிய அஸ்தமனம்
மாலை 6:01 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
அவிட்டம், சதயம்
சந்திராஷ்டம ராசி
இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று மேற்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக வெல்லம் பயன்படுத்தலாம்
இன்றைய கோயில் விசேஷங்கள்
திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணனுடைய நாயகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
சண்டேசுவர நாயனார் குருபூஜை
இன்றைய வழிபாடு
ஸ்ரீ முருகப்பெருமானை வழிபாடு செய்து வர செல்வ சேர்க்கை உண்டாகும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

டாபிக்ஸ்