Tamil Calendar 2025: ஜன.18 இன்றைய விஷேசங்கள் என்னென்ன?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. தமிழ் காலண்டர் தகவல்கள்!
Tamil Calendar 18.01.2025: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் நாளான இன்று (சனிக்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் உங்களுக்கு வழங்குகிறோம்.

இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்தால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பெருமாளைச் சனிக்கிழமை அன்று ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்தில் இருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார் என்பது ஐதீகம்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. இவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். சனிக்கிழமை விரதம் கடைபிடிக்கப்படும் போது பகல் நேரங்களில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிடலாம். இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடித்துக்கொள்ளலாம். மாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்லநேரம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு அறிவோம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
