மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.. மச்சம் இருக்கும் இடமும் பலன்களும் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.. மச்சம் இருக்கும் இடமும் பலன்களும் இதோ!

மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.. மச்சம் இருக்கும் இடமும் பலன்களும் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Jul 24, 2025 02:55 PM IST

மச்சங்களின் நிறங்களும் அதன் பலன்கள் பற்றியும் மச்ச சாஸ்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி இங்கு பார்ப்போம்.

மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.. மச்சம் இருக்கும் இடமும் பலன்களும் இதோ!
மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.. மச்சம் இருக்கும் இடமும் பலன்களும் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

சாம்பல் நிறத்தில் மச்சம் அமைந்திருந்தால், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை மிக்கவராக திகழ்வார்கள். வருமானத்தில் பெரிய அளவில் பலன் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிரந்தரமான வருமானத்திற்கு குறைவு இருக்காது.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும் என்று மச்ச சாஸ்திரங்கள் கூறுகின்றன. இளஞ்சிவப்பு நிறத்தில் மச்சம் அமைந்திருந்தால், மகான்களாக, கல்வியாளர், விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.

வெண்மை நிற மச்சம் இருந்தால், அவர்கள் பலசாலிகளாகவும், துணிச்சல் மிக்கவராகவும், வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் திறமையாளராக இருப்பார்கள்.

சற்று நீல நிறமான மச்சத்தைப் பெற்றிருப்போர் பழைமை விரும்பிகளாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். வணிகத்துறையில் ஆர்வமாக இருப்பார்கள்.

குங்கும நிறத்தில் மச்சம் அமைந்திருந்தால், இவர்கள் உல்லாசப் பிரியர்களாக திகழ்வார்கள். மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால் மிகவும் கலகலப்பான இயல்பான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரிடத்திலும் நட்புடன் பழகும் குணம் படைத்தவர்கள்.

எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்

நெற்றி - விசேஷம்

வலது கண் - அதிர்ஷ்டம்

இடது கண் - சுதந்திரம்

மூக்கு - முன்கோபம்

உதடுகள் - கல்வியில் உயர்ந்த நிலை

முகவாய் - நல்ல அம்சம்

வலது காது - அதிக பாசம்

இடது காது - வாழ்க்கை விரும்பியவாறு அமையும்

நாக்கு - குழந்தை உள்ளம் படைத்தவர்கள்

கழுத்து - மகிழ்ச்சி

முதுகின் வலதுபுறம் - பெரிய லட்சியவாதி

முதுகின் இடதுபுறம் - முயற்சிகளில் தோல்வி

மார்பு - கலையில் சிறந்து விளங்குவார்கள்

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.