தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஏப்ரல் இறுதி முதல் 3 ராசிகளுக்கு விரட்டி விரட்டி அடி.. புரட்டி எடுக்க போகும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள் நீங்களா!

ஏப்ரல் இறுதி முதல் 3 ராசிகளுக்கு விரட்டி விரட்டி அடி.. புரட்டி எடுக்க போகும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள் நீங்களா!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 17, 2024 01:43 PM IST

செவ்வாய் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அது சனி பகவானின் சொந்த ராசியாகும். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

செவ்வாய்
செவ்வாய்

நவகிரகங்களின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் ஆகவும் சில ராசிகளுக்கு சிக்கலாகவும் அமையும். அந்த வகையில் தளபதியாக விளங்கிவரும் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

தற்போது செவ்வாய் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அது சனி பகவானின் சொந்த ராசியாகும். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது பல சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள். உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் அதனை சற்று தாமதமாக நினைப்பது நல்லது.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய வேலை என்றாலும் அதிக கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும். 

வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் நீங்கள் நஷ்டத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel