Spiritual Tips: மகாவிஷ்ணுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?-here are spiritual tips to improve your spiritual wellness - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Spiritual Tips: மகாவிஷ்ணுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Spiritual Tips: மகாவிஷ்ணுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Feb 25, 2024 09:13 PM IST

தூய்மையான சிந்தனையோடு வழிபடுவோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதைத்தான் எல்லா மதமும் வலியுறுத்துகின்றன.

மகா விஷ்ணு
மகா விஷ்ணு

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால், அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்று சொல்வதுண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து வந்தாலே நல்லதே நடக்கும். இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனை நல்வழிப்படுத்தக்கூடிய முக்கிய விஷயங்களில் முதலாவதாக இருப்பது ஆன்மிகம். ஒருவர் எந்த ஒரு கடவுளை வேண்டுமானாலும் வழிபடலாம். தூய்மையான சிந்தனையோடு வழிபடுவோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதைத்தான் எல்லா மதமும் வலியுறுத்துகின்றன.

ஆன்மிகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, நாள்முழுவதும் இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும், மற்றவர்கள் பார்க்கும்படி பெருமையாக கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், பிறருக்கு கெடுதல் நினைக்காமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மிகம் தான். அந்த வகையில், ஆன்மிக அன்பர்களுக்கு உதவும் வகையில் சில பயனுள்ள தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

  • தலைமுடியின் முன் வகிட்டில் லட்சுமி இருப்பதால் மணமான பெண்கள் குங்குமம் இட்டுக்கொள்கின்றனர்.
  • வாழை, மாவிலை, எலுமிச்சம் பழங்களில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் சுபநிகழ்ச்சிகளில் இவற்றை பயன்படுத்துகிறோம்.
  • பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் கோயில்களில் காலையில் கோபூஜை செய்த பின்னரே சுவாமி தரிசனம் ஆரம்பமாகும்.
  • வில்வ மரத்தில் மகாலட்சுமி இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமைகளில் வில்வ இலைகளை பறிக்கக் கூடாது.
  • லட்சுமி தேவியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.
  • பூக்கள் இல்லாதபட்சத்தில் இலைகளில் பூஜிக்கலாமா என்று கேட்டால், பூக்கள் இல்லாதபட்சத்தில் பூஜை செய்யலாம். சிவபெருமானை வில்வ இலையாலும், பெருமாளை துளசி இலையாலும் அர்ச்சனை செய்கின்றோம்.
  • மகாவிஷ்ணுவின் அருள் பெற வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
  • வளர்பிறை பஞ்சமி, சஷ்டி ஆகிய இரு நாட்களில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு பார்வதி தேவியை பூஜிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்