தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Hastham Nakshatram: ’அமைதியாக இருந்து அதிரடி காட்டுவார்கள்!’ அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Hastham Nakshatram: ’அமைதியாக இருந்து அதிரடி காட்டுவார்கள்!’ அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 04, 2024 04:59 PM IST

”தொடக்க காலங்களில் கடினங்களை எதிர்கொண்டாலும், வாழ்கையின் பிற்பகுதியில், இவர்கள் பணக்காரர்களாக விளங்குவார்கள்”

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிபயங்கர புத்திசாலிகளாகவும், அதே வேளையில் பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள். 

எப்போதும் அமைதியாக காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு படோதாபம் ஏதும் இருக்க வாய்ப்புகள் இல்லை. தர்மசிந்தனைகள் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் சுற்றுலா செல்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.  

தொடக்க காலங்களில் கடினங்களை எதிர்கொண்டாலும், வாழ்கையின் பிற்பகுதியில், இவர்கள் பணக்காரர்களாக விளங்குவார்கள். 

ரகசியம் காப்பதில் கெட்டிக்காரர்களான இவர்கள் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். இரக்க சுபாவம் கொண்ட இவர்களுக்கு நன்றி உணர்வு இருக்கும். 

தோல்விகளை சந்தித்தாலும், தொடர் முயற்சிகள் மூலம் வெற்றிகளை பெற்றுவிடுவார்கள். பொய் பேசாமல் உண்மையை மறைப்பதில் இவர்கள் வல்லவர்கள். 

அஸ்தம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அசையா சொத்துக்கள் கிடைக்கும். 

அஸ்தம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பம் கட்டுக்கோப்பாக இருக்கும். 

அஸ்தம் மூன்றாம் பாதத்தில் பிறந்ந்தவர்கள் திறமையால் பலகாரியங்களை சாதித்து வெற்றி அடைவார்கள். 

அஸ்தம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சந்தோஷ நிலையை எட்டும் எண்ணம் கொண்டவர்கள். 

தேவ கணம் பொருந்திய அஸ்தம் நட்சத்திரம் ஆனது பெண் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு பெண் எருமை, இந்த நட்சத்திரத்தின் விருட்சம் அத்தி மரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் பறவையாக பருந்து உள்ளது. 

அஸ்தம் நட்சத்திரத்திற்கு உரிய தலமாக நாகப்பட்டினம் அருகே உள்ள கோமல் திருபாகூடலேஸ்வரர் ஆலத்தில் வழிபாடு செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும். ஆனாலும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள சிவாலங்களில் வழிபாடு நடத்துவது சிறப்புகளை தரும். 

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சந்திர மகாதசை வரும். இவர்களுக்கு செவ்வாய் தசை; செவ்வாய் புத்தி, குரு மகாதசை; குரு புத்தி, புதன் மகாதசை; புதன் புத்தி, சுக்ர மகாதசை சுக்ரபுத்தி, சூரிய மகாதசை, சூரிய புத்தி ஆகிய தசைகள் சாதகமான பலன்களை தரும். 

அஸ்தம் நட்சத்திரத்திரத்திற்கு வசிய நட்சத்திரமாக சுவாதி நட்சத்திரம் உள்ளது. ஆனாலும், சுவாதி மற்றும் அஸ்தம் நட்சத்திரம் இடையே ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் திருமணத்திற்கு பொருந்துவது இல்லை.

மிருகசீரிசம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ரேவதி, ஆயில்யம், கேட்டை, பூரம், பூராடம், பரணி, உத்தரம், உத்ராடம், கிருத்திகை ஆகிய நட்சத்திர நாட்களில் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தார்கள் புதிய காரியங்களை தொடங்கும் போது வெற்றிகள் கிட்டும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற் பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel