சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் முறை, யார் கையில் மாலை வாங்குவது - குருசாமி பாடகர் வீரமணி ராஜூ பகிர்வு
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் முறை, யார் கையில் மாலை வாங்குவது - குருசாமி பாடகர் வீரமணி ராஜூ பகிர்வு

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் முறை, யார் கையில் மாலை வாங்குவது - குருசாமி பாடகர் வீரமணி ராஜூ பகிர்வு

Marimuthu M HT Tamil
Nov 17, 2024 02:28 PM IST

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் முறை, யார் கையில் மாலை வாங்குவது என்பது குறித்து குருசாமி பாடகர் வீரமணி ராஜூ பகிர்ந்த தகவல்களைக் காண்போம்.

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் முறை, யார் கையில் மாலை வாங்குவது - குருசாமி பாடகர் வீரமணி ராஜூ பகிர்வு
சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் முறை, யார் கையில் மாலை வாங்குவது - குருசாமி பாடகர் வீரமணி ராஜூ பகிர்வு

இதுதொடர்பாக ட்ரெண்ட் பக்தி யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’அப்பா, அம்மா கைகளால் மாலை போட்டுக்கொள்ள வேண்டும். அதுவும் அம்மா கைகளால் மாலை போட்டுக்கொள்வது என்பது மிக விஷேசம். இதில் ஐயப்பன் வைத்த சூட்சமம் என்ன தெரியுமா. சில பேர் அப்பா, அம்மாகிட்ட சொல்லாமல் மாலைபோட்டுட்டு, தகவல் மட்டும் கொடுப்பான். நாம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். அமெரிக்காவில் இருக்கலாம், சிங்கப்பூரில் இருக்கலாம். ஆனால், அம்மா, அப்பாவிடம் ஒரு வார்த்தைச் சொல்லி, அம்மா, அப்பாவின் அனுமதியை நிச்சயம் பெற வேண்டும். இதுதான் அடிப்படை விதி. எந்த அம்மா, அப்பாவும் மாலை போடவேண்டாம் என்று சொல்வதில்லை. ஒரு வேளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால், மாலை போடக்கூடாது.

நம்மை மாலை போடச் சொல்ல ஐயப்பன் நினைக்க வேண்டும்: வீரமணி ராஜூ

அம்மா, அப்பாவுக்குப் பிடிக்கவில்லையென்றால், மாலை போடக்கூடாது. வழக்கமாக யாரும் சொல்லப்போவது இல்லை. சிலர் சொல்வாங்க, அம்மாவுக்குப் பிடிக்காது என்று. அவர்கள் சொல்லிவிட்டால் வேறு வழியே இல்லை.

நம்மகிட்ட காசு இருக்குடா, மாலைபோட்டு ஃபிளைட்டில் போயிடலாம்ன்னு நினைச்சிட்டு இருப்போம். நீங்க என்ன வேண்டுமென்றாலும் திட்டமிடலாம்சாமி, எங்கள் ஐயப்பன் ஒரு திட்டமிடுவார். அவர் யாரைப் பார்க்கணும்னு ஆசைப்படுகிறாரா, அவர்கள் தான் மாலை போட முடியும்.

அம்மா, அப்பாவின் உத்தரவு ஒன்று இருக்கு. ஐயப்பனின் ஆசை இல்லாமல் சபரிமலையின் எல்லையைக் கூட மிதிக்கமுடியாது. இதற்குப் பல விஷயங்கள் உதாரணங்களாக நான் சொல்ல முடியும்.

துளசி மணி மாலையணிந்து ஐயப்பன் விரதம் இருந்து சபரிமலை சென்றிடுவோம். ஐயோ, நான் ஸ்படிக மாலை போட்டிருக்கேனே, ருத்ர மாலை போட்டிருக்கேனே என்பார்கள் சிலர். நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள். அடிப்படையாக, ஒரு மாலை போடணும். அதற்கு முத்திரை மாலை என்று பெயர். முதல் வருடம் போடும் மாலையைத் தான், நீங்கள் கடைசி பயணம் செல்லும்வரை போடவேண்டும். அதனால் தான் அதற்கு முத்திரை மாலை என்று பெயர்.

ஏன் இதற்கு முத்திரை மாலை என்று பெயர் வந்தது?:

அந்தக் காலத்தில் ராஜாக்கள் எல்லாம், ஏராளமான ஆபரணங்கள் அணிந்திருப்பார்கள். அதைவிட முக்கியமாக, ராஜமுத்திரை மோதிரத்தை அணிந்திருப்பார்கள். பட்டாபிஷேகத்தின்போது, இந்த ராஜமுத்திரை மோதிரம், ராஜாவுக்கு அணிவிக்கப்படும். அதன்பெயர் முத்திரை மோதிரம் என்று பெயர். அந்த ராஜாவுக்குப் பின், அவரது மகன் ராஜாவாக ஆனால், அந்த மோதிரத்தைக் கழற்றி, மகனுக்குப் போடுவாங்க. அதுதான், ராஜ முத்திரை மோதிரம். அதே மாதிரி, முதல் தடவை எந்த முத்திரை மாலையைப் போடுகிறோமோ, அதைத் தான் கடைசி யாத்திரை வரைப் போடணும். ஒருவேளை அறுந்துபோச்சு, நயிந்துபோச்சு என்றால், புதியது வாங்கி பாலில் ஊறவைத்துப்போடலாம்.

நம் மாலை மீது மிகுந்த அக்கறையாக இருக்கவேண்டும். நம்பியார் சுவாமி ரொம்ப அழகாக சொல்வார். நீ மாலை போட்டால், ஐயப்பன் உன் கூட வந்திட்டார்ன்னு சொல்வார். அப்படியென்றால் என்ன அர்த்தம், ஐயப்பன் உன் உடம்பில் வந்து அமர்ந்துவிட்டார் நிச்சயம் என்பதுதான். ஐயப்பன் தத்துவமசி என்பார்கள். அதன் காரணம் என்ன, நானும் நீயும் ஒன்னுடா என்பார்,ஐயப்பன்.

ஐயப்பனே சொன்னார், நானும் நீயும் ஒன்று என்று. அதனால், சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று பார்க்கக்கூடாது. இது மிக முக்கியம்.

ஒரு பாட்டுகூட இருக்குது. ’சாதியில்லை மதமும் இல்லை யாவரும் சரிசமம். சபரிமலை ஐயன்முன்பு அன்பே ஒன்றே அற்புதம்’ என்று. அன்பு தான் விரதம். யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பது தான், விரதம். பற்று இல்லாமல் இருப்பது தான் விரதம். சாப்பிடாமல் விரதம் இருக்கும்போது, வீட்டில் தயார் செய்யும் உணவைச் சாப்பிடமுடியாமல் போயிற்றே என சபலப்படக் கூடாது என சொல்வார், நம்பியார் சுவாமி. அப்படி என்றால், சாப்பிட நினைத்தால் சாப்பிட்டுக்கொள் என்பார். நீ நீயாக இரு என்பார்.

மாலை போட்ட பின் என்ன செய்ய வேண்டும்?:

  • தினமும் காலையிலும் மாலையிலும் குளித்துவிட்டு ஒரு கோயிலுக்குப் போயிட்டு, கண்டிப்பாக வந்து வீட்டில் பூஜை செய்யவேண்டும்.
  • பெரும்பாலானோருக்கு வரும் சந்தேகம். நமது வீட்டில் மாதவிலக்கால் பெண்கள் விலக்கு பெறும்போது என்ன செய்யவேண்டும் என சந்தேகம் வரும். எனது குருசுவாமி சொல்வார், பெண்களுக்கு ஓய்வு எடுக்க இறைவன் கொடுத்த கொடை, அந்த மூன்று நாட்கள். அந்த நாட்களில் பெண்களை வெளியில் அனுப்பக்கூடாது என்பார். ஆனால், ஒரு கண்டிசன், என்னவென்றால், அவர்கள் தயார் செய்யும் சாப்பாட்டை நீங்கள் சாப்பிடக் கூடாது. அவ்வளவு தான். நம்பியார் சுவாமி ரொம்ப பிராக்டிக்கலாக சொன்னார், நம் மனசு சுத்தமாக இருக்கணும் அப்படி என சொல்வார்.
  • சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும்போது அம்மா, அப்பாவின் மரணம் நிகழ்ந்தால், மாலையைக் கழற்றிவிட்டு, ஒரு வருடம் சபரிமலைக்குக் கண்டிப்பாகப் போகக் கூடாது. தாய்மாமன் இறந்தாலும் சபரிமலை செல்லக்கூடாது. அப்பாவின் உறவுமுறையில் ஒருவர் இறந்துவிட்டால் கண்டிப்பாக மாலையைக் கழற்றிவிட்டு,சபரிமலைக்குச் செல்லக் கூடாது. சிலர் சொல்வார்கள், காரியம் முடிந்து, மாலை அணியலாம் என்று. அப்படி போகக் கூடாது.
  • அப்பாவழி நெருங்கிய உறவினர் இறக்கும்போது, நாம் போகாமல் இருந்துவிட்டு, வீட்டில் இருந்த சிலர் போனார்கள் என்றால் அது தீட்டு தான். கண்டிப்பாக மாலையைக் கழற்றி தான், ஆகவேண்டும்'' என முடித்தார். 
  • நன்றி: வீரமணி ராஜூ ஐயா அவர்கள் மற்றும் ட்ரெண்ட் பக்தி யூட்யூப் சேனல் 

Whats_app_banner

டாபிக்ஸ்