தமிழ் செய்திகள்  /  Astrology  /  Gurupeyarchi Palangal 2024 For Rishaba Rasi Horoscope Astrology

Gurupeyarchi Luck: ராசிக்கே வரும் குரு..ஆனாலும் சிக்கல்.. தூண்டிலில் மாட்டிய ராசி எது தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 23, 2024 09:06 AM IST

குரு பகவான் ரிஷப ராசிக்கு ஆகாதவர். முதற்கட்டமாக ரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு வந்து ஐந்து, ஏழு ஒன்பது ஆகிய வீடுகளை பார்ப்பார்.

குரு பெயர்ச்சி பலன்கள்!
குரு பெயர்ச்சி பலன்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ குருபகவான் தங்களுடைய ராசியான ரிஷப ராசிக்கு வரும் பொழுது நல்லது மட்டும்தான் நடக்குமா என்றால், பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் கலவையான பலன்களே கிடைக்கும். 

குரு பகவான் ரிஷப ராசிக்கு ஆகாதவர். முதற்கட்டமாக ரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு வந்து ஐந்து, ஏழு ஒன்பது ஆகிய வீடுகளை பார்ப்பார். 

ஐந்தாம் வீட்டை பார்க்கக்கூடிய குரு பகவான் உங்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்வார். ஒரு பக்கம் ஆரோக்கியத்தில் குளறுபடி செய்யும் குரு பகவான், நினைத்துப் பார்க்க முடியாத யோகங்களையும் இந்தப் பார்வையால் உங்களுக்குச் செய்வார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் புத்திர ஸ்தானத்தை அவர் ஐந்தாம் பார்வையாக பார்ப்பதினால் புத்திர யோகமானது உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசியை அவர் ஐந்தாம் பார்வையாகவும், உங்களுடைய விருச்சிக ராசியை ராசியான ஏழாம் வீட்டை, ஏழாம் பார்வையாகவும் பார்க்கிறார். ஆகையால் இதுவரை திருமணம் ஆகாத ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமண வரன் அமையும். ஐந்தாம் வீட்டில் இருக்கக்கூடிய கேதுவை குரு ஐந்தாம் பார்வையாக பார்ப்பதினால் எதிர்பாராத யோகங்கள் கிடைக்கும். ” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்