Guru Rajayogam: உருவாகும் மங்கள குரு ராஜயோகம்! 45 நாள்களில் நிகழ இருக்கும் மாற்றம் - செல்வ செழிப்பு பெற போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Rajayogam: உருவாகும் மங்கள குரு ராஜயோகம்! 45 நாள்களில் நிகழ இருக்கும் மாற்றம் - செல்வ செழிப்பு பெற போகும் ராசிகள்

Guru Rajayogam: உருவாகும் மங்கள குரு ராஜயோகம்! 45 நாள்களில் நிகழ இருக்கும் மாற்றம் - செல்வ செழிப்பு பெற போகும் ராசிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 16, 2024 05:15 PM IST

Mangala Guru Rajayogam: வியாழன்-செவ்வாய் இணைவு மங்கள குரு ராஜயோகம் உருவாகிறது. இதனால் அடுத்த 45 நாள்களில் நிகழ இருக்கும் மாற்றம் காரணமாக செல்வ செழிப்பு பெற போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்

மங்கள குரு ராஜயோகம் காரணமாக 45 நாள்களில் நிகழ இருக்கும் மாற்றம், செல்வ செழிப்பு பெற போகும் ராசிகள்
மங்கள குரு ராஜயோகம் காரணமாக 45 நாள்களில் நிகழ இருக்கும் மாற்றம், செல்வ செழிப்பு பெற போகும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

வியாழன் மற்றும் செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் உள்ளன. ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் இணைந்தால், அவற்றின் சேர்க்கை உருவாகிறது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, செவ்வாய் மற்றும் வியாழன் இணைவதால், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மங்கள-குரு ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது.

வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் ஆசீர்வாதத்துடன், இந்த ராஜயோகம் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகளுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. செல்வ செழிப்பை அபரிமிதமாக அதிகரிக்கும். அந்த வகையில் மங்கள-குரு ராஜயோகத்தால் நன்மை பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்

ரிஷபம் 

வியாழன்-செவ்வாய் சேர்க்கை ரிஷப ராசியில் அமைவதால் இந்த ராசிக்காரர்கள் உச்ச பலன்களைப் பெறுவார்கள். ஜோதிட சாஸ்திரப்படி ரிஷபம் ராசிக்காரர்களின் பேச்சுத் திறன் மேம்படும்.

ஆளுமை முன்பை விட அதிகமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது வருமான உயர்வை எதிர்பார்க்கும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்

வியாழன் மற்றும் செவ்வாய் இணைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை தரப் போகிறது. இந்த காலம் உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் செய்வோருக்கு இது நல்ல நேரம்.

நிலம், கட்டிடம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

வியாழன்-செவ்வாய் ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வியாழன் மற்றும் செவ்வாய் இணைவதால் விரும்பிய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.

பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். இந்த காலம் வணிகர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி சீராக இருப்பீர்கள்.

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

குருபகவான்

நவகிரகங்களில் மங்கள கிரகமாக குருபகவான் விளங்குகிறார். ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய குருபகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குரு பகவான் செல்வ செழிப்பு, வருமானம், தொழில் நன்மை, பொருளாதார உயர்வு, குழந்தை மற்றும் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் வியாழன்-செவ்வாய் இணைவால் ஏற்படும் மங்கள-குரு ராஜயோகத்தால் மேற்கூறிய ராசியினர் நன்மைகளை பெற்ற வளம் பெறுவார்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner