மேஷம் முதல் கன்னி வரை! குரு வக்ர நிவர்த்தி பலன்கள்! கொட்டி கொடுக்கப் போவது யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம் முதல் கன்னி வரை! குரு வக்ர நிவர்த்தி பலன்கள்! கொட்டி கொடுக்கப் போவது யாருக்கு?

மேஷம் முதல் கன்னி வரை! குரு வக்ர நிவர்த்தி பலன்கள்! கொட்டி கொடுக்கப் போவது யாருக்கு?

Suguna Devi P HT Tamil
Published Oct 30, 2024 04:15 PM IST

நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். கடந்த அக்டோபர் 9, 2024 முதல் 4 பிப்ரவரி 2025 வரை 119 நாட்கள் வக்ர நிலை எனும் பின்னோக்கி நகர தொடங்க உள்ளார். இந்த வக்ர பெயர்ச்சி மேஷம் முதல் கன்னி ராசிகளுக்கு அளிக்க கூடிய பலன்களை இங்கு காண்போம்.

மேஷம் முதல் கன்னி வரை! குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்! கொட்டி கொடுக்கப் போவது யாருக்கு?
மேஷம் முதல் கன்னி வரை! குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்! கொட்டி கொடுக்கப் போவது யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

மேஷம் 

தனம் ஸ்தானம் என அழைக்கப்படக்கூடியா 2 ஆவது இடத்தில் குரு சஞ்சாரம் செய்கிறார். இந்த குரு வக்ரம் அடைவதால் மேன்மையான பலன்கள் கிடைக்கப்போகிறது. நிலுவையில் இருந்த கடன்கள் வந்து அடையும். பொருளாதார நிலை சீராக உயரும். இதுவரை இருந்த சுப விரய செலவுகள் இனி இருக்காது. நீண்ட காலமாக இருந்த முகத்தில் ஏற்பட்ட உபாதைகள் நிவர்த்தி அடையும். குடும்ப விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரோகிணி நடிச்சத்திரத்தில் வக்ரம் அடையும் போது தனம் ,தானிய பாக்கியங்கள் கிடைக்கும். மேஷ ராசிக் காரர்கள் இனி எடுக்கப் போகும் முடிவு வெற்றி அடையும். ராகவேந்திரா ஆலயத்திற்கு சென்று வர நன்மை சேரும். 

ரிஷபம் 

ரிஷப ராசியினருக்கு இந்த குரு வக்ரம் சிறந்த மற்றும் பிரம்மாண்ட நன்மைகளை அளிக்கும். நீண்ட காலமாக இருக்கும் எதிரிகளின் பிரச்சனை தீரும். உங்களது வீட்டில் சுப காரியங்கள் நடக்கப் போகிறது. வர வேண்டிய மரியாதை தேடி வரும். புத்திர பாக்கியம், ராஜ யோகம் என பல இந்த வக்ர நிவர்த்தியில் நடக்கப்போகிறது. பெரிய வெற்றிகள் நடக்கப்போகிறது. வீடு,வாகனங்கள் வாங்கும் யோகம் வரப்போகிறது. அம்மன் தாயார் வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும். 

மிதுனம் 

மிதுனம் ராசிக்கு இதுவரை 12 ஆவது இடத்தில் விரய ஸ்தானத்தில் குரு இருப்பதால் வீண் செலவுகள் நடந்து இருக்கும். தற்போது குரு வக்ரம் அடைப்பதால் தங்கம் வாங்கும் யோகமும், வெளிநாடு செல்லும் அதிரஷ்டமும் கிடைக்கப் போகிறது. தொழில் துறையில் பெரும் உச்சத்தை அடைய போகிறது. உடல் கொழுப்பு அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வியாழக் கிழமையும் குருவிற்கு விரதம் இருக்க வேண்டும். சாய்பாபா அல்லது ராகவேந்திரா கோயிலுக்கு செல்ல வேண்டும். 

கடகம் 

கடக ராசியில் 11 ஆவது இடத்தில் உள்ளார். லாப ஸ்தானத்தில் இருப்பதால் இது மிகுந்த பலன்களை அளிக்கப் போகிறது. நண்பர்கள் வாயிலாக லாபங்கள் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் யோகம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். குல தெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும். 

சிம்மம் 

சிம்ம ராசிக் காரர்களுக்கு 10 ஆம் இடத்தில் குரு வக்ரம் அடைவதால் தொழில் அபிவிருத்தி அடையப் போகிறது. புரோமோசன் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. யாருக்கும் பணம் விஷயத்தில் சிவாரிசு செய்யும் முன்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொருட்கள் களவு போக வாய்ப்புள்ளது. முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.  

கன்னி 

குரு பார்வை இருக்கும் கன்னி ராசிக்கு வக்ரம் அடைவதால் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. பூர்வீக சொத்துக்கள் கிடைக்கப் போகிறது. வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் தீரும். மன நிம்மதி கிடைக்கப் போகிறது. தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.