Guru Vagra Palangal 2024: ’ரிஷபத்தில் வக்ரம் பெறும் குரு பகவான்!’ இந்த 4 ராசிகளுக்கு பணமழை உறுதி! மூட்டைக்கட்ட ரெடியா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vagra Palangal 2024: ’ரிஷபத்தில் வக்ரம் பெறும் குரு பகவான்!’ இந்த 4 ராசிகளுக்கு பணமழை உறுதி! மூட்டைக்கட்ட ரெடியா?

Guru Vagra Palangal 2024: ’ரிஷபத்தில் வக்ரம் பெறும் குரு பகவான்!’ இந்த 4 ராசிகளுக்கு பணமழை உறுதி! மூட்டைக்கட்ட ரெடியா?

Kathiravan V HT Tamil
Published Jul 30, 2024 09:18 PM IST

Guru Vagra Palangal 2024: குரு பகவான் வரும் அக்டோபர் 9, அன்று மதியம் 12:33 மணிக்கு ரிஷப ராசியில் வக்ரம் பெற உள்ளார். இந்த நிலை ஆனது பிப்ரவரி 4, 2025 வரை நீடிக்கும்.

Guru Vagra Palangal 2024: ’ரிஷபத்தில் வக்ரம் பெறும் குரு பகவான்!’ இந்த 4 ராசிகளுக்கு பணமழை உறுதி! மூட்டைக்கட்ட ரெடியா?
Guru Vagra Palangal 2024: ’ரிஷபத்தில் வக்ரம் பெறும் குரு பகவான்!’ இந்த 4 ராசிகளுக்கு பணமழை உறுதி! மூட்டைக்கட்ட ரெடியா?

இது போன்ற போட்டோக்கள்

ட்ரிக் பஞ்சாங்கின் கூற்றுப்படி, குரு பகவான் வரும் அக்டோபர் 9, அன்று மதியம் 12:33 மணிக்கு ரிஷப ராசியில் வக்ரம் பெற உள்ளார். இந்த நிலை ஆனது பிப்ரவரி 4, 2025 வரை நீடிக்கும். 

அக்டோபர் மாதத்தில் குரு பகவான் பிற்போக்கு நிலையில் இருப்பது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமே தரும், ஆனால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

மிதுனம்

குரு பகவான் வக்ர நிலை பெறுவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு தூங்குவதில் இருந்த சிக்கல் நீங்கி தூக்கம் நன்றாக வரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களிலும் வெற்றிகளக் குவிக்கும் நிலை ஏற்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சமூகத்தில் பாராட்டப்படுவார்கள். நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். செல்வம் பெருகும்.

கன்னி

வக்ரம் பெறக்கூடிய குரு பகவான் கன்னி ராசியினருக்கு மிகவும் சுப பலன்களை தர உள்ளார். உங்கள் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலை இருக்கும். வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

வக்ரம் பெறும் குரு பகவானால் விருச்சிகம் ராசிக்காரர்களின் செல்வநிலை உயரும். மாணவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். பொருள் வளம் பெருகும். சட்டச் சர்ச்சைகளில் இருந்து விடுபடுவீர்கள். 

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அரசின் உதவிகள் கிடைக்கும், நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner