Guru Transit: 7 ராசிகளுக்கு லக்கி பிரைஸ்தான்! இந்த குரு பெயர்ச்சி எந்த ராசிக்கார்களுக்கு தொழிலில் கைகொடுக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Transit: 7 ராசிகளுக்கு லக்கி பிரைஸ்தான்! இந்த குரு பெயர்ச்சி எந்த ராசிக்கார்களுக்கு தொழிலில் கைகொடுக்கும் பாருங்க!

Guru Transit: 7 ராசிகளுக்கு லக்கி பிரைஸ்தான்! இந்த குரு பெயர்ச்சி எந்த ராசிக்கார்களுக்கு தொழிலில் கைகொடுக்கும் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Apr 02, 2024 11:44 AM IST

Guru Transit: 2025 மே மாதம் வரை இதே ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தொழில் வாழ்க்கையில் எந்த ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவான் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக உள்ளார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். 2025 மே மாதம் வரை இதே ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

தொழில் வாழ்க்கையில் எந்த ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். அந்த வகையில் வேலையில் எந்த ராசிக்கு எப்படி இருக்கும் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு குருபகவான் நல்ல பலன்களை தருவார். பதவி உயர்வு பலருக்கு கிடைக்கும். கட்டுமானம், மருத்துவ துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல பலன் காத்திருக்கிறது.

கடகம்

இந்த முறை கடக ராசிக்காரர்களுக்கு லாபகரமான நல்ல இடத்தில், நல்ல வேலையில், நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளி நாடுகளுக்கு செல்பவர்களுக்கும் தடங்கல்கள் நீங்கி நல்ல வாய்ப்பு அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சிறப்பாக அமையும் என்றாலும் வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு மட்டும் நல்ல வாய்ப்பு அமையும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு குருப்பெயர்ச்சி நன்மை தரும். இருக்கும் இடத்தில் இருந்து பணி மாறுதல் பெற தேவை இல்லை. புதிதாக ஒரு வேலைக்கு மாறினாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்கு வளர்ச்சி நன்றாக இருக்கும்

துலாம்

வெளிநாட்டுடன் தொடர்பில் இருக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

இந்த முறை வேலை தொழில் அனைத்தும் நன்றாக இருக்கும். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் வந்து சேரும்.

மகரம்

மகரம் யோக கிரகமாக இல்லாவிட்டாலும் 5 ம் இடத்தில் ரிஷபத்தில் குரு உள்ளார். இதனால் சில யோகங்கள் வேலை செய்யும். அந்த வகையில் குருபகவான் நீங்கள் எதிர்பார்த்த ஒன்று விரும்பிய ஒன்று கிடைக்க வழி செய்வார்.

ஆனால் இந்த விஷயத்தில் குரு உங்கள் லக்கணத்திற்கு குரு யோக காரகனா, தோஷ காரகனா இல்லை மத்திமரா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்