தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Puthan Luck: குரு - புதன் இணைவு.. ஈகோ நிறைந்த கிரக சேர்க்கை.. சரஸ்வதி யோகம் வாய்க்குமா.. வாய்க்காதா?

Guru Puthan Luck: குரு - புதன் இணைவு.. ஈகோ நிறைந்த கிரக சேர்க்கை.. சரஸ்வதி யோகம் வாய்க்குமா.. வாய்க்காதா?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 24, 2024 08:06 PM IST

Guru Puthan Luck: குரு - புதன் இணைவு பெற்றவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். நன்றாக படிப்பார்கள். இவர்களுக்கு காலி மனையானது கண்டிப்பாக இருக்கும். நிலமாக, நிறைய சொத்துக்களை வாங்கி வைத்திருப்பார்கள்.

Guru Puthan Luck: குரு - புதன் இணைவு.. ஈகோ நிறைந்த கிரக சேர்க்கை.. சரஸ்வதி யோகம் வாய்க்குமா.. வாய்க்காதா?
Guru Puthan Luck: குரு - புதன் இணைவு.. ஈகோ நிறைந்த கிரக சேர்க்கை.. சரஸ்வதி யோகம் வாய்க்குமா.. வாய்க்காதா?

Guru Puthan Luck:  குருவும், புதனும் இணையும் போது என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் பேசி இருக்கிறார். 

சரஸ்வதி யோகம் 

இது குறித்து அவர் பேசும் போது, “குருவும் சரி, புதனும் சரி இரண்டு பேருமே அறிவாளிகள் ஆவர். இதில் புதனுக்கு குரு கிடையாது. குரு - புதன் இணைவு என்பது, நாம்தான் இங்கு எல்லாமே... நமக்குத்தான் அனைத்தும் தெரியும் என்ற நினைப்பைக்கொடுத்து விடும். இந்த இணைவு என்பது படிப்பில் இரண்டுக்கும் மேற்பட்ட டிகிரிகளை கொடுக்கும். எனக்கு தெரிந்து இந்த இணைவு பெற்று, பிஹெச். டி வரை படித்தவர்களும் இருக்கிறார்கள். 

இந்த இணைவு பெற்றவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். நன்றாக படிப்பார்கள். இவர்களுக்கு காலி மனையானது கண்டிப்பாக இருக்கும். நிலமாக, நிறைய சொத்துக்களை வாங்கி வைத்திருப்பார்கள். இவர்களிடத்தில் ஏதாவது ஒரு தேடுதல் இருந்து கொண்டே இருக்கும். இந்த இணைவு என்பது சரஸ்வதி யோகத்தைக்கொடுக்கும். 

சகோதரி மீது அதிக பாசம் இருக்கும் 

இளைய சகோதரி இருந்தால், அவர்கள் மீது இவர்களுக்கு அதிக பாசம் இருக்கும். சித்தி இருந்தால், அவர்களுக்கு இவர்களை மிகவும் பிடிக்கும். புதன் - குரு சேர்க்கையானது ஈகோ கிரகம் ஆகும். எந்த துறையாக இருந்தாலும், அதில் வல்லவராக இருக்கும் நபர்களை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

இவர்கள் இருவருமே லக்னத்தில் திக் பலம் அடையக்கூடிய கிரகங்கள். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்துவது இவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். தோல் பிரச்சினைகள் இருக்கும். தாய் - மாமன் உறவு கசப்பானதாக இருக்கும். எங்கெல்லாம் மஞ்சள் - பச்சை நிறங்கள் ஒன்றாக இருக்கிறதோ அங்கெல்லாம் குரு புதன் சேர்க்கை இருக்கும்.” என்று பேசினார். 

குரு, செவ்வாய் இணைவு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பிரபல ஜோதிடரான அவிநாசி ஜோதிலிங்கம், பக்தி இன்ஃபினிட்டி சேனலுக்கு பேசி இருந்தார். அதனையும் இங்கு பார்க்கலாம். 

 

கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கும்

இது குறித்து அவர் பேசும் போது, “ குரு பகவான் காலச்சக்கரத்தில் ஒன்பதாம் இடத்தை குறிக்கும். செவ்வாய் பகவான் ஒன்றாம் இடத்தை குறிப்பவராக இருக்கிறார். குரு செவ்வாய் இணைந்து இருந்தால், அவருக்கு கட்டுமஸ்தான உடல் இருக்கும். வொர்க் அவுட், டயட் என இருந்து உடம்பை கட்டுமஸ்தாக பார்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். செவ்வாய் என்பது இரத்ததை குறிக்கும். குரு கொழுப்பை குறிக்கும். அதாவது கெட்ட கொழுப்பு.. ஆகையால் இவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆகையால், ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ந்து மருத்துவபரிசோதனையை எடுத்துக்கொள்வது இவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இவர்களிடம் மிகவும் மதிப்பு மிகுந்த வீடு, மனை என ஏதாவது நல்ல சொத்து கண்டிப்பாக இருக்கும். இவர்களுக்கு சகோதர பாசம் அதிகமாக இருக்கும். ஆனால் அவர்களிடம் இருந்து இவர்களுக்கு பெரும்பாலும் காயங்களே வந்து சேரும்.

மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள். வீட்டை கோயில் போல வைத்திருப்பார்கள். ஊர் பொதுகாரியம் என்றால் இவர்கள் முன்னால் வந்து நிற்பார்கள். இவர்களது குழந்தைகளும் நல்ல நிலையில் இருப்பார்கள். நேர்மையாக இருப்பார்கள். சமுதாயத்தில் ஒரு இடத்தை அடைய போராடிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு தலை சிறந்த ஆலயம் என்றால், அது திருச்செந்தூர் முருகன் ஆலயம் தான்.

இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன், கணவன் மனைவி உறவு அப்படியே கட் ஆகி விடும். வேலைப்பளு காரணமாக அந்த விஷயம் நடக்கும்.

அங்கு இவர்கள், இரவு நடக்கிற ஏதாந்த தரிசனும், மறுநாள் காலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனும் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, வாழ்க்கை செழிக்கும். இவர்கள் உணவுப் பிரியராக இருப்பார்கள். சுவை இல்லை என்றால் இவர்கள் சாப்பிடமாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் மைனஸ் என்னவென்றால், இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன், கணவன் மனைவி உறவு அப்படியே கட் ஆகி விடும். வேலைப்பளு காரணமாக அந்த விஷயம் நடக்கும்.” என்று பேசினார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: