Guru Peyarchi Palangal 2024: ’ராஜா ஆக போகும் ராசி யார்?’ மேஷம் முதல் கன்னி வரை குரு பெயர்ச்சி பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi Palangal 2024: ’ராஜா ஆக போகும் ராசி யார்?’ மேஷம் முதல் கன்னி வரை குரு பெயர்ச்சி பலன்கள்!

Guru Peyarchi Palangal 2024: ’ராஜா ஆக போகும் ராசி யார்?’ மேஷம் முதல் கன்னி வரை குரு பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Published May 01, 2024 06:00 AM IST

”Guru Peyarchi Palangal 2024: மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களின் குரு பெயர்ச்சி பலன்கள்!”

மேஷம் முதல் கன்னி வரையிலான குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
மேஷம் முதல் கன்னி வரையிலான குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

இது போன்ற போட்டோக்கள்

  • மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் இருந்த குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு வருவதால், மன அழுத்தம் தீரும். தொழில், உத்யோகம், வியாபரத்தில் செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக இருந்த அலைச்சல்கள் மற்றும் பயங்கள் நீங்கி அமைதி கிடைக்கும். 6, 8, 10ஆம் இடங்களை குரு பகவான் பார்ப்பது விஷேஷம் தரும். சத்ருக்கள், துரோகிகளை வெல்வீர்கள். 

  • ரிஷபம்

ஜென்ம ராசிக்கு வரும் குரு பகவான், 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். 30 வயதை கடந்த ரிஷப ராசிக்காரர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்யோக மாற்றம், தொழில் மாற்றங்களை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மாறுதல்கள் கிடைக்கும்.  

பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் படிப்பு, தொழில், உத்யோகம் மேம்படும், திடீர் பணவரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன அழுத்தம் நீங்கும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 

  • மிதுனம்

12 ஆம் இடத்திற்கு வரும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆம் இடங்களை பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய், தந்தை, சகோதர சகோதரிகள் ஆதரவு கிட்டும். கடன் தொல்லைகளில் சிக்கி இருந்தவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடல்நல பிரச்னைகள் தீரும். வழக்கு உள்ளிட்ட பிரச்னைகள் உங்களுக்கு சாதகம் ஏற்படுத்தும். தொழில் முதலீடுகளில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். 

  • கடகம்

கடக ராசிக்கு 11ஆம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார். மேலும் 9ஆம் இடத்தில் ராகுவும், 3ஆம் இடத்தில் கேதுவும் உள்ளனர். அஷ்டம சனி பாதிப்பும் கடக ராசிக்கு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாரை வழிபாடு செய்வது மேன்மை தரும். 

முதலீடு செய்வதில் கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் நீங்கி ஏற்றம் உண்டாகும். மனக்கவலை படிப்படியாக குறையும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் தொழில், வியாபாரம், கல்வி ஏற்றம் பெறும். குடும்பத்தில் புது வரவு வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். 

  • சிம்மம்

10ஆம் இடத்தில் வரும் குரு பகவானால் திருச்செந்தூர் முருகனை சரணாகதி அடைவது நல்லது. உத்யோகத்தில் கவனமாக இருப்பது அவசியம். குடும்ப உறவுகள், எதிர் பாலினத்தவர்கள் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோர், பெரியோருடன் சண்டை இடக்கூடாது. பொறுமையாக இருந்தால் பழைய கடன்கள் தீரும். படிப்பில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். 

  • கன்னி

9ஆம் இடத்தில் குரு பகவான் வருவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் படிப்பு, உத்யோகம், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.  உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி கூடும். பண வரவுக்கு உண்டான அனுகூலங்கள் ஏற்படும். எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும். நரம்பு, கழுத்து ஆகிய உறுப்புகளை கவனித்துக் கொள்வது நல்லது. செல்வாக்கு உயர்ந்து வாழ்வில் முன்னேற்றம் கூடும். பூமி, வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கோபம் கூடாது. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, ஊர் மாற்றம் ஆகியவற்றில் நன்மைகள் கூடும். 

Whats_app_banner