தமிழ் செய்திகள்  /  Astrology  /  Guru Peyarchi Palangal 2024 For Simmam Zodiac Signs Horoscope Astrology News Tamil

Guru Peyarchi Luck: மறைந்திருக்கும் சனி.. அந்த 1 ½ மாதம் மிக கவனம்.. சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 22, 2024 08:01 AM IST

சிம்ம ராசிக்காரர்கள் தற்போது சொல்ல முடியாத அளவு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். குரு பகவான் பத்தாம் இடத்திற்கு வந்தாலே, பிரச்சினைகள் வரும் என்று சொல்வார்கள். பாக்யஸ்தானத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் உங்களது ராசியை ஐந்தாம் பார்வையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது கண்டக சனி நடந்து கொண்டிருக்கிறது. எட்டாம் இடத்தில் ராகு பகவான் இருக்கிறார். இரண்டாம் பாவத்தில், வாக்கு ஸ்தானத்தில் கேது பகவான் இருக்கிறார். மேஷ ராசியில் இருக்கக்கூடிய குரு பகவான் ஏப்ரல் 30ஆம் தேதி இடம்பெயர்ந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.

சிம்ம ராசிக்காரர்கள் தற்போது சொல்ல முடியாத அளவு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். குரு பகவான் பத்தாம் இடத்திற்கு வந்தாலே, பிரச்சினைகள் வரும் என்று சொல்வார்கள். பாக்யஸ்தானத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் உங்களது ராசியை ஐந்தாம் பார்வையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் உறவுகளில் விரிசல் விழுவது போல உங்களுக்கு அறிகுறிகள் தெரியலாம். அதே போல பணவரவு வருவது போல தெரிந்து, அப்படியே நின்று போகலாம்.

தற்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு எட்டாம் பாவத்தில் இருக்கக்கூடிய ராகு பகவானால் மிகப்பெரிய யோகம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 

உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தில் சனிபகவான் 6,8,12 ஆகிய இடங்களில் மறைந்தும், வக்கிரமாகவும் இருப்பார் என்றால், அவர் மிகப்பெரிய ராஜயோகத்தை உங்களுக்கு கொடுப்பார்

உங்களுக்கு சிம்ம லக்னம் இருக்கிறது என்றால் 3,6,12 ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய ராகு பகவான் பெரிய யோகத்தை உங்களுக்கு கொடுப்பார். 

வருங்காலம் உங்களுக்கு நல்ல காலமாகவே காணப்படுகிறது. 2025 டிசம்பர் வரை உங்களுக்கு பொருள் வரவு நன்றாகவே வந்து சேரும். 

புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்களது கிளைகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்

மே மாதம் முதல் ஜூன் 15 தேதி வரை நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்

உங்களது வாக்கு ஸ்தானத்தில் கேது பகவான் உட்கார்ந்து இருக்கிறார். அவர் உங்களை சிக்கலில் மாட்ட வைக்க தயாராக இருக்கிறார். ஆகையால் உங்களது வாயை அடக்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மிகப்பெரிய விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்