தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: ’கோடீஸ்வர யோகம் பெறும் மேஷம்! கோபுரத்தில் ஏற்ற போகும் குரு!’ குரு பெயர்சி பலன்கள் இதோ!

Guru Peyarchi 2024: ’கோடீஸ்வர யோகம் பெறும் மேஷம்! கோபுரத்தில் ஏற்ற போகும் குரு!’ குரு பெயர்சி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 15, 2024 11:47 AM IST

“Guru Peyarchi 2024: குரு பகவான் 8ஆம் இடமான விருச்சிகம் ராசியை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பணியில் பதவி உயர்வு கிடைக்கும்”

மேஷம்
மேஷம்

தனம் நன்றாக இருக்கும் என்பதால் உங்கள் தொழில் நன்றாக இருக்கும். உங்கள் சொல்வாக்கு மேன்மை அடையும். உங்கள் வார்த்தைகளுக்கு வீட்டிலும், சமூகத்திலும் மதிப்பும், மரியாதையும் உண்டாகும். 

குடும்பம் சார்ந்த விஷயங்களில் பிரச்னைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு பிரச்னைகள் தீரும். திருமணம் ஆகாத மேஷம் ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும். 

2ஆம் இடத்தில் குரு இருப்பதால் பொருளாதார தொந்தரவுகள் தீரும், மந்தநிலை மாறி சுறுசுறுப்பு அடைவீர்கள், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும், குழந்தைகள் படிப்பு மேம்படும், மனம் சிறப்பாக இருக்கும், மனதில் குதுகலம் பிறக்கும். 

குருவின் பார்வை 6ஆம் இடமான கன்னி ராசியை பார்ப்பதால் கடன் தொல்லை நீங்கும். உடலில் நோய்களால் பிரச்னைகளுக்கு உள்ளானவர்கலுக்கு தீர்வு கிடைக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் தீரும், வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும், ஏற்கெனவே வேலைகளில் இருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தீராத வழக்குகள் முற்றுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

வீடு, வண்டி வாகனம் உள்ளிட்டவை வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் இதுபோன்ற சுபகாரியங்களுக்காக கடன்களையும் வாங்குவர்.

குரு பகவான் 8ஆம் இடமான விருச்சிகம் ராசியை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பணியில் பதவி உயர்வு கிடைக்கும். 2ஆம் இடத்தில் குருவும், 11ஆம் இடத்தில் சனியும் உள்ளதால் நல்ல பண வரவு ஏற்படும், திடீர் பண வரவு ஏற்படும், தடைப்பட்ட பணங்கள் தேடி வரும், பங்கு சந்தையில் லாபம் ஈட்டலாம். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். 

10ஆம் இடமான மகரத்தை குரு பார்ப்பதால், தொழில் மற்றும் வேலை சார்ந்த இடங்களில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களால் தன வரவு ஏற்படும்.  சொந்த தொழில் செய்ய ஏதுவான காலமாக இது அமையும். 

வரும் ஓராண்டு எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஜெயம் ஆக கூடிய தன்மைகள் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 9ஆம் இட அதிபதியான குரு தன ஸ்தானத்தில் உள்ளதால் தந்தை மூலம் மேன்மைகள் கிடைக்கும். 

வரும் ஒரு ஆண்டு அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். 6ஆம் இடத்தில் கேது இருப்பதால் மனதில் ஞானம் பிறக்கும். கடவுள் அனுக்கிரங்கள் கிடைக்கும், ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel