மிதுனத்தில் நுழையும் குரு! இந்த 5 ராசிகளை இனி கையில் பிடிக்கவே முடியாது! பணமழை கொட்டும் ராசிகள்!
12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர 12 மாதங்கள் எடுத்துக் கொள்வார். தற்போது ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் வரும் 2025ஆம் ஆண்டில் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
Guru Peyarchi Palangal 2025: தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறுவது வழக்கம். 12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர 12 மாதங்கள் எடுத்துக் கொள்வார். தற்போது ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் வரும் 2025ஆம் ஆண்டில் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். பின்னர் அக்டோபர் மாதத்தில் கடக ராசிக்கு சென்று, டிசம்பரில் மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார். ஜோதிட கணக்குப்படி, குருவின் மிதுன பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், நன்மை பயப்பதாகவும் இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும்.
1.ரிஷபம்
2025ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி ஆனது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நன்மை அதிகரிக்கும் ஆண்டாக இருக்கும். திடீர் பணவரவுகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார சூழ்நிலை வலுவாக இருக்கும். பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும்
2. மிதுனம்
குரு பகவான் மிதுன ராசிக்கு வருவது மிகுந்த நன்மைகளை கொண்டு வரும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் மாறி பொருளாதார நிலை வலுப்பெரும். கூடுதல் வருமானத்திற்கான வழிகள் உண்டாகும். புதிய முதலீடுகளை செய்வீர்கள். சமூகத்திலும், குடும்பத்திலும் மதிப்பு மற்றும் மரியாதைகள் கூடும். சிலருக்கு உயர்கல்வி வாய்ப்புகள் கைக்கூடும்.
3. கன்னி
2025ஆம் ஆண்டு நடைபெறும் குருவின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறனால் உயர் அதிகாரிகள் ஈர்க்கப்படுவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். புதிய வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள்.
4. துலாம்
துலாம் ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி மூலம் நன்மைகளை அடைவீர்கள். பணியிடங்களில் உள்ள சவால்களை சந்தித்து வெற்றி பெறுவீர்கள். ஏற்கெனவே போட்டு வைத்த திட்டங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
5. கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் விலகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். வாழ்கை துணை உடன் தாம்பதியம் சிறக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.