தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: மறைவு ஸ்தானத்தில் குரு.. தீமையாக மாறும் பார்வை..பொசுங்கப்போகும் ராசிகள் என்னென்ன?

Guru Peyarchi 2024: மறைவு ஸ்தானத்தில் குரு.. தீமையாக மாறும் பார்வை..பொசுங்கப்போகும் ராசிகள் என்னென்ன?

Kalyani Pandiyan S HT Tamil
May 06, 2024 06:29 PM IST

6 -ம் இடம் என்பது கடனைக் குறிக்கும். ஆகையால் கடன் உங்களுக்கு இருந்தால், அதை அதிகரிக்கச் செய்வார். 6ம் இடத்தை பார்ப்பதால், வீட்டில் தேவையில்லாத குழப்பங்கள், மன கஷ்டங்கள் உண்டாகும். சில சமயங்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி, விவாகரத்து வரை கூட செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள்!
குரு பெயர்ச்சி பலன்கள்!

ஜோதிடத்தில் குரு பகவான் எந்த இடத்தை பார்க்கிறாரோ, அந்த இடத்தை அவர் வளர விடுவார், அதில் வளர்ச்சியைக்கொண்டு வருவார். அதாவது பெரிதுபத்துவார். 

மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை, சிறிய வீடாக இருந்தால் அதை பெரிய வீடாக மாற்றுவார், வாகனங்களிலும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வைப்பார்.

6 -ம் இடம் என்பது கடனைக் குறிக்கும். ஆகையால் கடன் உங்களுக்கு இருந்தால், அதை அதிகரிக்கச் செய்வார். 6ம் இடத்தை பார்ப்பதால், வீட்டில் தேவையில்லாத குழப்பங்கள், மன கஷ்டங்கள் உண்டாகும். சில சமயங்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி, விவாகரத்து வரை கூட செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

8ம் இடம், என்பது மிகப்பெரிய கடனை குறிக்கும். அதாவது, அந்தக் கடனை நம்மால் அடைக்கவே முடியாது என்ற சூழ்நிலை நிலவும். அந்தளவு பெரிய கடனை குருபகவான் கொடுத்துவிடுவார். ஆகையால் நீங்கள் கடன் விவகாரத்தில், மிக மிக கவனமாக இருக்க வேண்டும். 

ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை, குருபகவான் பொதுவாகவே உங்களுக்கு நல்லது செய்ய மாட்டார். காரணம், அவர் 6ம் வீட்டு அதிபதி. இப்போது அந்த குரு 8ம் இடமான அஸ்தமத்தில் மறைந்து விட்டார். குரு அமறைந்து விட்டாலே நமக்கு அதில் பெரிதான நற்பலன்கள் கிடைக்காது. அவரின் பார்வை தீய பார்வையாகவும் மாறிவிடும். இதனால் நிறைய பண விரயம் உருவாகும். உடல்நலக்குறைவு, அலைச்சல் உள்ளிட்டவற்றால் அதிக செலவு உருவாகலாம்.” என்று பேசினார்.

முன்னதாக, 2024 ம் ஆண்டு குரு பகவானால் குபேரயோகத்தை பெறப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை ஜோதிடர் சிம்மா தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருந்தார். அதனையும் தெரிந்து கொள்ளலாம். 

அவர் பேசும் போது, “மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்திற்கு பணவரவு நன்றாக இருக்கும்.

அதே போல, ரிஷப ராசிக்கும், ரிஷப லக்னத்திற்கும் இந்த ஆண்டில் பணவரவு நன்றாக இருக்கும். காரணம், உங்கள் ராசியின் மீதே குரு பகவான் அமர்ந்து இருக்கிறார். குருவை ஜோதிடத்தில் தனக்காரன் என்று அழைப்போம். இப்படியான அமைப்பு, உங்களிடத்தில் இருப்பதால் நீங்கள் காசை தேடி ஓடுவீர்கள். அது குறித்தான சிந்தனைகள் அதிகமாகும். பணம் பற்றிய சிந்தனைகள் எழும் போதுதான், பணத்தை தேடி ஓடுவோம். பணத்தை நாம் தேடும் போது, பணம் நம்மைத் தேடி வரும்.

கடகராசிக்கும் இந்தாண்டு பணவரவு நன்றாக இருக்கும். காரணம் குரு பகவான் லாபஸ்தானத்திலேயே அமர்ந்து இருக்கிறார். இது முக்கியமான விஷயம் ஆகும். லாபஸ்தானத்தில் எந்த கிரகம் இருந்தாலும், உங்களிடம் பணம் வந்து சேரும். அப்படி பார்க்கும் பொழுது சுபகிரகமான குருவே அங்கு இருப்பதால், இந்தாண்டு முழுக்க உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும்.

சிம்ம ராசி, சிம்ம லக்னத்திற்கு இந்தாண்டு நன்றாக பணவரவு வரும். பதவி உயர்வு, பிசினஸில் அடுத்தக்கட்டம் செல்வது உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இந்தக்காலக்கட்டத்தில் நடக்கும்.

கன்னி ராசிக்கு இந்தாண்டு அமோகமாக பணவரவு இருக்கும். காரணம், குரு பகவான் சிறப்பு பார்வையாக கன்னி ராசியைப்பார்க்கிறார். குரு பகவான் கன்னிராசிக்கு பாக்யஸ்தானத்தில் இருக்கிறார்.

பொதுவாகவே, ஜாதகத்தில் பாக்யஸ்தானம் மிகவும் முக்கியமானது. இது ஏன் முக்கியமானது என்று சொல்கிறோம் என்றால், முன் ஜென்மத்தில் நாம் நிறைய நன்மைகளை செய்திருப்போம். அவையனைத்தையும் கொண்டிருப்பது அந்த பாக்யஸ்தானம்தான். அதுதான் 9 ம் வீடு.

இதன் மீது சுபகிரம் பயணிக்கும் போது, நமக்கு சுபகாரியங்கள், வெற்றி உள்ளிட்டவை கிடைக்கும். அடுத்த ஒரு வருடத்தில் சுபகிரகமான குரு பகவான் அங்கேயே இருக்கப்போகிறார். அதனால் தனவரவு நன்றாக இருக்கும்.

விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்திற்கும் பணவரவு இந்தாண்டு நன்றாக இருக்கும். குரு பகவானின் சமசப்தமான பார்வை உங்கள் மேல் விழுகிறது. குரு பகவான் ஓரக்கண்ணால் பார்த்தாலே சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படும் நிலையில், நேரடியாக பார்க்கும் போது, அதிஅற்புத பலன்கள் கிடைக்கும். ஆகையால் விருச்சிக ராசிக்காரர்கள் என்ன விதமான ஸ்டெப் எடுத்தாலும், அது வெற்றியை நோக்கியேச் செல்லும். நீங்கள் முயற்சி எடுத்தால் போதும், வெற்றி உங்கள் கைவசம் வந்து விடும்.

தனுசு மற்றும் தனுசு லக்னத்திற்கும் இந்த குபேர யோகம் கிடைக்கும். குரு பகவான் 6ம் இடத்தில் மறைந்திருந்தாலும், குரு உடைய பார்வை, உங்களது 10ம் வீட்டில் விழுகிறது. ஆகையால் தொழில் ரீதியான முன்னேற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.அதே போல மகரராசி மற்றும் மகரலக்ன காரர்களுக்கு, குபேர யோகம் கிடைக்கும்.

குரு பகவான் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அடுத்த ஒருவருடம் இருப்பார். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது மிக முக்கியமான ஸ்தானம் ஆகும். இதில் குரு பகவான் இருப்பது குபேர யோகம் கிடைப்பதற்கான வழி. அவர், 5 இடத்தில் இருந்து உங்களது லக்ன ஸ்தானத்தையும் பார்ப்பார், பாக்கியஸ்தானத்தையும் பார்ப்பார். ஆகையால் மகர ராசி மற்றும் மகர லக்னகாரர்கள் இந்த காலக்கட்டத்தில், சிறிது முயற்சி எடுத்தாலே போதும் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைவர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்