தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’.. கெட்ட இடத்தில் குரு.. மிஞ்சுமா மிதுனம்!

Guru peyarchi 2024: ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’.. கெட்ட இடத்தில் குரு.. மிஞ்சுமா மிதுனம்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 24, 2024 09:16 AM IST

எப்போதுமே உபய ராசிகளுக்கு ஏழாம் இடம் என்பது மாரகம் மற்றும் பாதக ஸ்தானமாக வருகிறது. அந்த வகையில் குரு பகவான் ஏழாம் இடமான தனுசு ராசிக்கு அதிபதியாக வருகிறார்.

மிதுனம்!
மிதுனம்!

மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் எவ்வாறு அமையும் என்பது குறித்து, பிரபல ஜோதிடர் சுபாஷ் பால கிருஷ்ணன் ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலுக்கு பேசிய தகவல்கள் இவை!

அவர் பேசும் போது, “குரு பெயர்ச்சியானது ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு குருவானவர் மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.