தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: ’வெற்றிகள் தேடி வரும்! வெளிநாடு யோகம் வரும்!’ மகரத்தை தூக்கி நிறுத்த போகும் குரு பெயர்ச்சி!

Guru peyarchi 2024: ’வெற்றிகள் தேடி வரும்! வெளிநாடு யோகம் வரும்!’ மகரத்தை தூக்கி நிறுத்த போகும் குரு பெயர்ச்சி!

Kathiravan V HT Tamil
Apr 01, 2024 08:54 PM IST

“மகரம் ராசிக்கு 3ஆம் வீட்டுக்கும், 12ஆம் வீட்டுக்கும் அதிபதியாக குருபகவான் உள்ளார். உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான ரிஷபத்திற்கு குரு பெயர்வதால் பெரும் யோகங்கள் மகர ராசிக்கு கிடைக்கும்”

மகரம் ராசி
மகரம் ராசி

மகரம் ராசியை பொறுத்தவரை தொழிலை பற்றி நினைக்க கூடிய ராசியாக விளங்குகிறது. இவர்கள் உழைப்புக்குகாரர்களாக விளங்குவர். பட்டம், பதவி, அந்தஸ்து, கௌரவம் உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். 

இவர்களின் தைரிய குணம், தன்னம்பிக்கை, குடும்பம் பற்றிய சிந்தனை உள்ளிட்டவை மகர ராசிக்கு ஓங்கி இருக்கும். வாழ்கையில் எந்த துன்பம் வந்தாலும் எழுந்து என்று வென்று காட்டும் தன்மை மகரத்திற்கு உண்டு. மகர ராசிக்குள் செவ்வாய் உச்சம் பெறுவதால் இவர்களது எண்ணங்கள் வீரியமானதாக இருக்கும். 

மகரம் ராசிக்கு 3ஆம் வீட்டுக்கும், 12ஆம் வீட்டுக்கும் அதிபதியாக குருபகவான் உள்ளார். உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான ரிஷபத்திற்கு குரு பெயர்வதால் பெரும் யோகங்கள் மகர ராசிக்கு கிடைக்கும்.

ஏழரை சனி காரணமாக கடந்த காலங்களில் கடும் சிக்கல்களையும், வேதனையும் மகர ராசிக்காரர்கள் அனுபவித்து இருப்பார்கள். 

பொருளாதாரத் தடை, உத்யோக தடை, மன அலைச்சல், தொழில் பிரச்னை, கொடுத்த பணம் திரும்பாமை உள்ளிட்ட சிக்கல்களை கடந்த காலங்களில் சில மகர ராசிக்காரர்கள் சந்தித்து இருப்பார்கள். ஆனால் பணம், தங்கம் உள்ளிட்டவைகளின் காரகரான குரு பெயர்ச்சியல் தடைகள் அனைத்தும் விலகும். 

ராகு பகவான் 3ஆம் இடத்தில் இருந்து உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார். காது, மூக்கு, தொண்டை உறுப்புகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சோம்பேறி தனத்தை கைவிட்டுவிட்டு தினமும் உடற்பயிற்சி செய்வது மேலும் நன்மைகளை ஏற்படுத்தி தரும். 

எழுந்த உடன் குளித்துவிட்டு பணிகளை தொடங்கும் மகரத்திற்கு பெரிய அனுகூலம் ஏற்படும். இந்த காலத்தில் பெரிய லாபங்களை மகர ராசிக்காரர்கள் சம்பாதிப்பார்கள். 

மீடியாத்துறையில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு பெரும் உயர்வு, புகழ், விருதுகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  உங்கள் குழந்தைகள் விஷத்தில் கோபதாபங்கள் செய்ய வேண்டாம். அவர்களை சபிக்க கூடாது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வீடு புதுப்பிப்பது, கால்நடை வாங்குவது, கால்நடை தொழில் செய்வது உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்படும். 

தொழில் மேன்மை, உத்யோக மேன்மை, வியாபார மேன்மை, படிப்பு மேன்மை உண்டாகும். அஷ்ட லட்சுமி கடாட்சம் ஏற்படும் அமைப்பு உள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் மகரத்திற்கு ஏற்படும். 

பாத சனி ஏற்பட்டுள்ள பாதிப்பை குரு பகவான் குறைத்து நன்மைகளை ஏற்படுத்துவார். 9ஆம் பார்வையாக குருபார்வை பதிவதால் பெரும் வளர்ச்சி ஏற்படும். வேலை, உத்யோகத்தில் இட மாற்றம், வெளிநாடுகளில் வேலை மாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை ஏற்படும். 

தொழிலில் பெரும் லாபங்கள் ஏற்படும், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்து வெற்றிகள் தேடி வரும். 

ஜோதிடத்தை பொறுத்தவரை லக்னம் என்பது உயிர், ராசி என்பது உடல் ஆகும். எனவே துல்லியமான பலன்களை பெற்ற உங்கள் சொந்த ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்து துல்லியமான பலன்களை பெறுங்கள். 

டாபிக்ஸ்