Guru Peyarchi 2024: 'குரு பார்வையால் கோபுரம் ஏறுமா கும்பம்!’ குரு பெயர்ச்சி பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: 'குரு பார்வையால் கோபுரம் ஏறுமா கும்பம்!’ குரு பெயர்ச்சி பலன்கள் இதோ!

Guru Peyarchi 2024: 'குரு பார்வையால் கோபுரம் ஏறுமா கும்பம்!’ குரு பெயர்ச்சி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Published Apr 02, 2024 02:55 PM IST

“குரு பெயர்ச்சியில் பொருள் விரையம், பண விரையம் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது. உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தை பார்ப்பதால் உடல்நலம் சீராகும். 10ஆம் இடத்தில் குரு பார்வை பதிவதால் வாக்கு வலிமையால் பொருள் ஈட்டும் தன்மை உண்டாகும்”

கும்பம்
கும்பம்

இது போன்ற போட்டோக்கள்

கும்ப ராசிக்கு இதுவரை மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 4ஆம் இடத்தில் அஷ்டாஷ்டம குருவாக சஞ்சரிக்க போகிறார். அஷ்டமத்து குரு என்னவெல்லாம் செய்யுமோ அதில் பாதியை அஷ்டாஷ்டம குரு செய்துவிடும். 4ஆம் இடத்திற்கு வரும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களை பார்க்கிறார். 

கும்ப ராசிக்கு கடந்த நான்கரை வருடங்களாக ஜென்ம சனி நடந்து வருகிறது. ஆனால் கும்பத்திற்கு ராசி அதிபதி சனி என்பதால் பெரும் பாதிப்புகள் வராது, அதே வேளையில் பெரிய அளவிளான நற்பலன்களும் இருக்காது. 

செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து மரியாதை கிடைக்கும், சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். 4ஆம் இடத்தில் குரு வருவதால் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்கள் சேரும், வண்டி, வாகனங்கள் அமையும், சொந்த பந்தங்கள் மூலம் உதவி கிடைக்கும். வெளிநாடு வெளியூர் பயணங்கள், பேச்சுக்கு மரியாதை கிடைப்பது உள்ளிட்ட அம்சங்கள் ஏற்படும். 

குரு பெயர்ச்சியில் பொருள் விரையம், பண விரையம் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது. உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தை பார்ப்பதால் உடல்நலம் சீராகும். 

10ஆம் இடத்தில் குரு பார்வை பதிவதால் வாக்கு வலிமையால் பொருள் ஈட்டும் தன்மை உண்டாகும். 

மக்கள் தொடர்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் மேம்படும், வீடு, நிலம் மூலமாக ஆதாயம், வேதியியல், மருத்துவர், ராணுவம் தொடர்பான தொழில்களில் நல்ல முன்னேற்றமும், ஆதாயமும் ஏற்படும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்படும். 

ராசிக்கு 12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற விரையங்களில் இருந்து உங்களை காக்கும். உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தில் ராகு உள்ளதால் பேச்சில் கவனம் தேவை, கடும் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம், அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடக்கூடாது. 

கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீர்வதும், சமாதான உடன்படிக்கையும் ஏற்படும். கூடாநட்பில் கவனம் தேவை, தாய் வழி உறவு, ரத்த பந்த உறவுகளின் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்கை துணை தேக ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். 

உங்கள் உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தொழில் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக காணப்பட்ட கஷ்டம் தீரும். உத்யோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக நிவர்த்தி ஏற்படும். 

இரவு நேர பயணங்கள், தொலைதூர பயணங்கள் அவசியமாக இருந்தால் மட்டும் செல்லுங்கள், இல்லை எனில் பயணத்தை ஒத்திவைத்து காலையில் மேற்கொள்ளுங்கள். தொலைதூர பயணங்கள் செல்லு முன் சிதறுகாய் உடைப்பது பிரச்னைகளை அண்டவிடாது. 

கும்ப ராசிக்காரர்கள் பிரச்னைகளில் இருந்து விடுபட வழிபாடுகளில் கவனம் செலுத்துவது அவசியம். காரைக்காலில் உள்ள திருநள்ளாறு மற்றும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கோயில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டால் பிரச்னைகள் தீரும். 

Whats_app_banner

டாபிக்ஸ்