தமிழ் செய்திகள்  /  Astrology  /  Guru Peyarchi 2024: Guru Peyarchi Benefits For Kanni Rasi

Guru Peyarchi 2024: ’பணம் கொட்டும்; திருமணம் கிட்டும்!’ கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Mar 06, 2024 03:58 PM IST

குரு பகவான் ஆனவர் உங்கள் ராசியையும் மற்றும் 3ஆம் இடம், 9ஆம் இடத்தையும் பார்க்கிறார். இது மிகச்சிறந்த கால கட்டமாக இருக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் ஆனவர் உங்கள் ராசியையும் மற்றும் 3ஆம் இடம், 9ஆம் இடத்தையும் பார்க்கிறார். இது மிகச்சிறந்த கால கட்டமாக இருக்கும். 

பொருளாதாரத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. உங்கள் முயற்சியால் நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பலன் கிடைக்கும். புதிய வேலை கிடைப்பது, வெளிநாடுகளில் வேலை கிடைப்பது, வேலையில் உள்ள சிக்கல்கள் தீருதல், புதிய தொழில் தொடங்குதல், கூட்டுத்தொழில் தொடங்குவதல் ஆகியவற்றுக்கு அற்புதமான காலகட்டமாக இது உள்ளது. ஆனால் தொழில் தொடங்கும் முன் சொந்த ஜாதகத்தை ஆராய்வது அவசியம்.

குரு பகவான் சுப செலவுகளை உங்களுக்கு ஏற்படுத்துவார், கோயில்களை புனரமைப்பது உள்ளிட்ட ஆன்மீக செயல்களை முன்னின்று செய்வீர்கள். இதற்கு தேவையான பணவரவுகளையும் குரு பகவான் ஏற்படுத்துவார். தொழில் செய்து வரும் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலமாக அமையும். வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் உள்ளிட்டவற்றை இந்த ஆண்டில் நீங்கள் செய்யலாம். 

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். வீட்டில் இருந்த சொத்து பிரச்னைகள் சுமூக முடிவை எட்டும். இளைய சகோதரர் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். 

உடல்நலத்தை பொறுத்தவரை 6ஆம் இடத்தில் இருக்கும் சனி உடல்நல பாதிப்புகளை குறைக்கும் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும் 7ஆம் இடத்தில் உள்ள ராகு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துவது முக்கியம். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, சரியான நேரத்தில் தூங்குவதும் அவசியம். 

WhatsApp channel

டாபிக்ஸ்