தமிழ் செய்திகள்  /  Astrology  /  Guru Peyarchi 2024: Guru Peyarchi Benefits For Kadagam Rasi

Guru Peyarchi 2024: ’பணம் கொட்டும்; குழந்தை கிட்டும்!’ கடக ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Feb 23, 2024 08:02 PM IST

”குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் இருந்து 3, 5, 7 ஆகிய இடங்களை அடுத்த ஓராண்டுக்கு பார்க்க போகிறார். இதனால் மகிழ்ச்சி, பொருளாதார உயர்வு ஆகியவை ஏற்படும்”

கடக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
கடக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் இருந்து 3, 5, 7 ஆகிய இடங்களை அடுத்த ஓராண்டுக்கு பார்க்க போகிறார்.  இதனால் மகிழ்ச்சி, பொருளாதார உயர்வு ஆகியவை ஏற்படும். 

தனகாரகனான குரு பகவான், கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்களில் பயணிப்பது அற்புத நேரமாக உங்களுக்கு அமையும். 

அஷ்டமத்து சனி காலத்திலும், பண வரவுக்கு குறை இருக்காது. 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பயணங்கள் மூலம் பண வரவு இருக்கும், 5ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூர்வீக சொத்து பாதிப்பில் இருந்த சங்கடங்கள் அகன்று பணவரவு வரும். 7ஆம் இடத்தை குரு பார்ப்பதால், உங்கள் வாழ்கை துணை மூலமாக பணவரவு கிடைக்கும்.   

குடும்பத்தை பொறுத்தவரை, குரு பகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். நீண்ட நாட்கள் திருமணம் நடக்காத கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் ஆகும். திருமணம் ஆகி பிரிவில் இருக்கும் தம்பதிகள் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். 

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும். குழந்தைகளுக்கு உள்ள உடல்நல பாதிப்பு சரியாகும். பிள்ளைகள் சார்ந்த நன்மைகள் கடக ராசிக்காரர்களுக்கு ஏற்படும். குடும்பம் சார்ந்த சொத்துக்களில் உள்ள வில்லங்கம் தீர்த்து பூர்வீக சொத்துகள் கிடைக்கும். 

WhatsApp channel

டாபிக்ஸ்