தமிழ் செய்திகள்  /  Astrology  /  Unexpected Luck Will Come, Guru Peyarchi 2024 For Ashwini Star

Guru Peyarchi 2024: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகும் குரு..! அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு என்ன பலன்கள்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 02, 2024 10:01 PM IST

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த மேஷ ராசியினருக்கு குரு பகவனால் கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

அஸ்வின் நட்சத்திரகாரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25
அஸ்வின் நட்சத்திரகாரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25

ட்ரெண்டிங் செய்திகள்

2024 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் மாறுகிறார். இந்த இடமாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட இருக்கிறது.

குரு ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார்.

குரு பெயர்ச்சியால் அஸ்வினி நட்சத்தினர் பெறும் பலன்கள்

மேஷ ராசியில் இடம்பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தில் குரு நல்ல பலன்களையே தருகிறார். கடன் பிரச்னை, உடல் நல கோளாறுகள், எதிரிகளால் பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகும் காலமாக இருக்கிறது. மனஉளைச்சல் விலகி தெளிவு பிறக்கும்.

குருவால் கோடி நன்மைகளை பெறுவீர்கள். தொழில்துறையை சார்ந்தவர்கள், புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கிறது.

நகை, பணம், ஆடை ஆபரணங்களுக்கு எந்த குறையும் இருக்காது. மிக பெரிய வளர்ச்சி கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவீர்கள். பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள். மாமியார், மருமகள் இணைக்கமாக செல்வீர்கள். உறவுகளிடம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்

தன்னம்பிக்கை பிறக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

திடீர் அதிர்ஷ்டம்

சூரிய திசை, சந்திர திசையில் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செவ்வாய் திசையில் பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். முருகனை வழிபடுவதால் நன்மை பிறக்கும். காளியை வழிபாடு செய்தால் ராகு, கேது பாதிப்பு இருக்காது.

இரண்டாம் இடத்துக்கு வரும் குரு பகவான் நல்ல வேலை வாய்ப்பை பெற்று தருவார். ஜென்ம ராசியில் குருபகவான் இருந்ததால் ஏற்பட்ட தடைகள் நீங்கி, வளர்ச்சியை கொடுக்கும் காலமாக அமையும். பணவரவு உண்டு. வீட்டில் சுப விஷேசங்கள் நடக்கும்.

சுப உதவிகள் கிடைக்கும்

தசாபுத்தி ரீதியாக இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரும். இந்த ஆண்டில் உங்கள் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். சுப உதவிகள் கிடைக்கும். வருமானமும், செலவும் சரிசமமாக இருக்கும். ஒரு பக்கம் கடனை அடைத்தாலும், இன்னொரு பக்கம் பிள்ளைகளின் படிப்பு, வீடு கட்டுவதற்கு போன்ற சுப காரியங்களுக்கு கடன் பெறுவீர்கள்.

உடலில் இருந்த நோய் நொடியெல்லாம் குணமாகும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். 

அரசு சார்ந்த பணிகளில் தாமதம் இல்லாமல் முடிவடையும், விவசாயம் செய்வோர் வளர்ச்சியை பெறுவார்கள். பல்வேறு மாற்றங்களையும் ஏற்றங்களையும் கொடுக்கும் காலமாக இருக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்