தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணமழை கொட்ட போகிறார் குரு.. அதிர்ஷ்டம் வருகிறது.. நட்சத்திரத்தில் அதிரடி காட்டுகிறார் குரு பகவான்

பணமழை கொட்ட போகிறார் குரு.. அதிர்ஷ்டம் வருகிறது.. நட்சத்திரத்தில் அதிரடி காட்டுகிறார் குரு பகவான்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 10, 2024 01:03 PM IST

ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான்
குரு பகவான்

தேவர்களின் ராஜகுருவாக குருபகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அரசியல் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கடக ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் கட்டாயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்றுத் தரப் போகின்றது. பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியல் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய சூழ்நிலை அமையும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்