குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி! துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் பலன்கள்!
ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் ஆனவர் வரும் நவம்பர் 28ஆம் தேதி அன்று சந்திர பகவானை அதிபதியாக கொண்ட ரோகிணி நட்சத்திரத்திற்குள் செல்ல போகிறார். குரு பகவானின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும்.
ஜோதிடத்தில் தேவகுரு எனப்படும் குரு பகவானுக்கு தனி இடம் உண்டு. குரு பகவானின் அருள் ஒருவருக்கு இருந்தால் அதிர்ஷ்டம் உறுதி ஆகும். அறிவு, ஆசிரியர்கள், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, சமயப்பணி, புனித இடங்கள், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு பொறுப்பான கிரகமாக குரு பகவான் உள்ளார்.
ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் ஆனவர் வரும் நவம்பர் 28ஆம் தேதி அன்று சந்திர பகவானை அதிபதியாக கொண்ட ரோகிணி நட்சத்திரத்திற்குள் செல்ல போகிறார். குரு பகவானின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் ஆன்மீக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. பணியிடங்களில் வேலை இருந்து கொண்டே இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்படலாம். நம்பிக்கை குறைவு உண்டாகும். பொறுமையை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். ஆன்மீக ஈடுபாடு கூடும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். லாப வாய்ப்புகள் அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். நண்பரின் உதவியால் பணவரவு உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. சகோதர உறவுகள் உறுதுணையாக இருப்பார்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் தன்னம்பிக்கை குறையும். பேச்சில் நிதானமும், கவனமும் தேவை. தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகள் கூடும். புதிய தொழில்களை தொடங்குவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் உயர்வு உண்டாகும். கடின உழைப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். வணிகத்தில் புதிய கூட்டாளிகளை சந்திப்பீர்கள். வியாபாரம் மேம்படும். உங்கள் செயல்பாடுகளுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.