தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பொட்டு வைத்து புரட்டப் போகும் சுக்கிரன்.. பண இழப்பு ஏற்பட வாய்ப்பு.. இது ராசிக்காரங்க தப்பிச்சுக்கோங்க

பொட்டு வைத்து புரட்டப் போகும் சுக்கிரன்.. பண இழப்பு ஏற்பட வாய்ப்பு.. இது ராசிக்காரங்க தப்பிச்சுக்கோங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 10, 2024 02:41 PM IST

Sukra Bhagavan Nakshatra transit: சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது அவருடைய இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை செய்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது.

குருபகவான்
குருபகவான்

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். அது சனி பகவானின் ராசி ஆகும் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிரன் பகவானும் சேர்ந்துள்ளார்.

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது அவருடைய இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை செய்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நெருங்கிய நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை அமையும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அவமானம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காரணம் இல்லாமல் உங்களை சிக்கல்கள் தேடி வரும். வீண்பழியை நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பண இழப்பை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாமல் மற்றவர்களுக்கு செலவு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். பணம் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்