Tamil News  /  Astrology  /  Guru Bhagavan Is Going To Create Favorable Circumstances For You

Guru Peyarchi: குரு தங்க மூட்டை எடுத்து வருகிறார்.. அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 12:40 PM IST

குரு பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார்.

மேஷ ராசியில் நேரான பயணத்தை குரு பகவான் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு முழுவதும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குரு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பது உறுதி என கூறப்படுகிறது. உங்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக மாற்றுவார். மனதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அது உங்களுக்கு சுகமாக அமையும்.

கடக ராசி

 

குரு பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். மனதில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய சம்பவங்கள் நிகழும். முழுமையான நம்பிக்கை உங்களுக்கு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிக உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு மன அமைதியையும் மற்றும் மகிழ்ச்சியையும் கொடுக்க போகின்றார். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். லாப கரம் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நல்ல பலன்கள் உங்களுக்கு அமைய உள்ளது.

தனுசு ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல செல்வாக்கை கொடுப்பார். உங்களுடைய வார்த்தைகளுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். தொடர்ந்து வந்து தொழில் உங்களுக்கு சாதகமாக முன்னேற்றத்தைக் கொடுக்கும். அலைச்சல் இருந்தாலும் அதற்கு ஏற்ற வருமானம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.