ஜூன் மாதத்தில் பிச்சு எடுக்கப் போகிறார் குரு.. தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜூன் மாதத்தில் பிச்சு எடுக்கப் போகிறார் குரு.. தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

ஜூன் மாதத்தில் பிச்சு எடுக்கப் போகிறார் குரு.. தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 18, 2024 01:54 PM IST

Guru Bhagavan: குரு பகவான் ராசி மாற்றம் செய்த இரண்டு நாட்களிலேயே ரிஷப ராசியில் அஸ்தமனமானார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். வருகின்ற ஜூன் மாதம் தொடக்கத்திலேயே ரிஷப ராசியில் இருந்து உதயமாக்கின்றார். இதனால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.

ஜூன் மாதத்தில் பிச்சு எடுக்கப் போகிறார் குரு.. தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
ஜூன் மாதத்தில் பிச்சு எடுக்கப் போகிறார் குரு.. தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே மிகவும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது. கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் ராசி மாற்றம் செய்த இரண்டு நாட்களிலேயே ரிஷப ராசியில் அஸ்தமனமானார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். வருகின்ற ஜூன் மாதம் தொடக்கத்திலேயே ரிஷப ராசியில் இருந்து உதயமாக்கின்றார். இதனால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் நடைபெறும். ஜூன் மாதத்தில் இருந்து வெற்றி பாதை உண்டாகும். மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த போதும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக் கூடும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பற்றி தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது இடத்தில் குரு பகவான் உதயம் ஆக்கியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்ய விரும்பக் கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாக்கிவிடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9