தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: 12 வருடங்களுக்கு பிறகு.. குரு செவ்வாய் சேர்க்கை.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்

Lord Guru: 12 வருடங்களுக்கு பிறகு.. குரு செவ்வாய் சேர்க்கை.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2024 09:51 AM IST

Lord Guru: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

12 வருடங்களுக்கு பிறகு.. குரு செவ்வாய் சேர்க்கை.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்
12 வருடங்களுக்கு பிறகு.. குரு செவ்வாய் சேர்க்கை.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்

நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது செவ்வாய் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை மாதம் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேஷ ராசி 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் மீது ஆதாயங்கள் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் வேலை மற்றும் தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. வருமானத்தில் பெரிய அளவில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிக்கி கடத்த பணம் உங்களை தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9