Guru Peyarchi 2024: நல்ல வளர்ச்சி அடைவீர்கள்..! திடீர் யோகம் உண்டு - பூசம் நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: நல்ல வளர்ச்சி அடைவீர்கள்..! திடீர் யோகம் உண்டு - பூசம் நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024: நல்ல வளர்ச்சி அடைவீர்கள்..! திடீர் யோகம் உண்டு - பூசம் நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 13, 2024 11:00 PM IST

கடக ராசியில் நான்கு பாதங்களும் இடம்பிடித்திருக்கும் பூசம் நட்சத்தினருக்கு எதிர்வரும் குரு பெயர்ச்சியால் கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பூசம் நட்சத்திரனருக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2024
பூசம் நட்சத்திரனருக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2024

குருபெயர்ச்சியால் பூசம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

பூசம் சனி பகவானின் நட்சத்திரமாக இருந்து வருகிறது. இந்த நட்சத்திரனரின் நான்கு பாதங்களும் கடக ராசியிலேயே இடம்பிடித்துள்ளது. புதன் திசையில் இருப்பவர்களுக்கு (27 வயது வரை) மாணவர்களுக்கு படிப்பு ரீதியாக இருந்த தடைகள் நீங்கும். வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் பணியும் கிடைக்கும்.

திருமண வயதை நெருங்யிருப்பவர்களுக்கு தடைகள் ஏற்படலாம். சுய ஜாதக ரீதியில் சிலருக்கு நல்ல வரன்கள் கைகூடி வரும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கேது திசையில் இருப்பவர்கள் (34 வயது வரை) தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள். வளர்ச்சியும் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். வாழ்க்கையில் நன்மை தரும் நல்ல மாற்றங்களை பெறுவீர்கள்

சுக்கிர திசையில் இருப்பவர்களுக்கு (54 வயது வரை) சுயதொழில் செய்பவர்களுக்கு இருந்த வந்த பிரச்னைகள் அனைத்தும் அகலும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பை கொடுக்கும். பாதியில் இருந்த வேலைகள் மீண்டும் தொடரும்.

சூரிய திசையில் இருப்பவர்கள் (60 வயது வரை) துன்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். உறவுகள் ரீதியாக இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். சந்திர திசையில் இருப்பவர்கள் (71 வயது வரை) எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடை நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கலாம். உடல் ரீதியாக இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். திடீர் யோகம் உண்டு.

செவ்வாய் திசையில் இருக்கும் நபர்கள் (77 வயது வரை) மேன்மை அடையும் காலமாக உள்ளது. சொத்து பிரச்னைகள் தீர்வுக்கு வரும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. ராகு திசையில் இருப்பவர்களுக்கு (95 வயது வரை) வளர்ச்சிகளை கொடுக்கும். வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner